எந்த பொருட்கள் எல்லாம் விலை குறையும்..???
ஜிஎஸ்டி கவுன்சிலின் 50ஆவது கூட்டம் டெல்லியில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதாவது கேன்சர் எனப்படும் புற்றுநோய்க்கான மருந்து மீது வரியில் மாற்றம், திரையரங்குகளில் விற்கப்படும் ஸ்நாக்ஸ் விலையில் மாற்றம் ஆகியவை குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது. மேலும் ஆன்லைன் வீடியோகேம் விளையாடி அதில் கிடைக்கும் வருவாயில் 28விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்பட இருக்கிறது.உணவுப்பொருட்களுக்கு 18விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த வரி தற்போது சினிமா டிக்கெட்டுடன் வாங்கினால் 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 12 விழுக்காடு முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. குதிரைப்பந்தயங்கள்,கேளிக்கை விடுதிகள்,ஆன்லைன் விளையாட்டு வருவாய்க்கு 28விழுக்காடு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. பன்முக பயன்பாட்டு வாகனங்களின் செஸ் வரி உயர்த்தப்படுகிறது.4000மில்லிமீட்டர் அளவும், 1,500 சிசி திறனும், 170 மில்லிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு 22 விழுக்காடு செஸ் வரி அமலாக இருக்கிறது