நிதியமைச்சர் பேசும்போது உயர்ந்து,வீழ்ந்த பங்குகள் எவை?
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பாதுகாப்பான பரிவர்த்தனைக்கான வரி அமலுக்கு வரும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. STT எனப்படும் இந்த வரி 0.062%-ல் இருந்து 0.1விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 0.0125 ஆக இருந்த ஃபியூச்சர்ஸுக்கான வரி 0.02%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குறுகிய கால முதலீட்டு ஆதாய வரி15 விழுக்காட்டில் இருந்து 20 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. 2027 வரை இந்தியா 3 ஆவது பெரிய பொருளாதார நாடாக திகழும் என்று சர்வதேச நாணய நிதியம் கருத்து தெரிவித்துள்ள நிலையில் உலகளாவிய வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 200 அடிப்படை புள்ளிகள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐடிசி நிறுவனம் பாதகத்தில் முடிந்தது. டைட்டன் நிறுவனம் வெறும் 9 விழுக்காடு மட்டுமே ஏறியுள்ளது. ப ஆண்ட் ஜி நிறுவனத்தில் 5 விழுக்காடு ஏற்றம் காணப்பட்டது. நிதியமைச்சர் பேசும் போது ஐடிசி, டைட்டன், கோத்ரேஜ் கன்சியூமர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன. உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக 11.1% அதாவது 11 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்குவதாக நிதியமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்தார். இது மொத்த ஜிடிபியில் 3.4% ஆகும். sobha Developers,AstraZeneca Pharma,Dabur, Tata Consumer, Avanti Feeds, P&G Hygiene, Godrej Consumer உள்ளிட்ட நிறுவன பொருட்கள் விலைகள் உயர்ந்தன.
ஏஞ்சல் ஒன் மற்றும் ஃபெடரல் வங்கி ஆகிய இரண்டு நிறுவன பங்குகள் மட்டுமே குறைவான விலைக்கு வணிகம் நடந்தன.
பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்ட அறிவிப்பு, ரியல் எஸ்டேட் துறையில் பெரிய பாய்ச்சலை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.