கடுப்பான வெள்ளக்காரன் என்ன செஞ்சான் தெரியுமா?
தரமான வாழ்க்கை முறை யாருக்குத்தான் பிடிக்காது? இதற்காக வெளிநாடுகளுக்கு சென்று படித்து முன்னேற பல இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் உள்ளது. ஆனால் சிலர் இந்த வாய்ப்புகளை தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதாவது பிரிட்டனுக்கு படிக்கச்செல்வது ஒரு நபர் என்றால் அவரின் மனைவி,குடும்பத்தினரில் யாரோ ஒருவரை அழைத்துச் செல்வதற்கு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விரைவில் கொண்டு வருகிறது. புதிதாக தயாராகும் விதிகளின்படி, உயர் மதிப்புள்ள படிப்புகளை படிப்போருக்கு மட்டுமே தங்கள் குடும்பத்தை உடன் அழைத்துச்செல்ல விசாவில் மாற்றம் செய்யப்படுகிறது. அறிவியல், கணிதம் மற்றும் பொறியியல் படிக்கும் மாணவர்கள் மட்டுமே தங்கள் குடும்பத்தினரை உடன் அழைத்துச்செல்ல அனுமதிக்க முடியும். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் மேலே கூறிய மூன்று பிரிவுகள் தவிர்த்து மற்ற பிரிவுகளில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்போர் மட்டுமே தங்கள் குடும்பத்தினரை பிரிட்டனுக்கு அழைத்துச்செல்ல முடியும். கடந்தாண்டில் மட்டும் படிக்க சென்ற மாணவர்கள் 5 லட்சம் பேருக்கு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர்களில் 1லட்சத்து 35ஆயிரத்து 788 பேர் தங்கள் குடும்பத்தினரை உடன் அழைத்துச்சென்றுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு 16ஆயிரத்து47 பேருக்கு மட்டுமே விசா வழங்கப்பட்ட சூழலில் பிரிட்டனில் கடந்தாண்டு மட்டும், 1லட்சத்து 61ஆயிரம் இந்திய மாணவர்களுக்கும்,அவர்களை சார்ந்த 33ஆயிரத்து 240 பேருக்கும் விசாக்கள் அளிக்கப்பட்டுள்ளன. புகலிடம் தேடி பிரிட்டன் வந்தோரின் எண்ணிக்கையும் இதுவரை இல்லாத உச்சமாக 1லட்சத்து 61 ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கையை குறைக்க அந்நாட்டு அரசு விரைவில் அறிவிப்பை வெளியிட இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காக 35 பில்லியன் பவுண்டுகளை பிரிட்டன் அரசு செலவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.