அர்ஜூனராக மாறிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ்!!!!

புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ரிசர்வ் வங்கி தற்போது அர்ஜுனரை போல விலைவாசி உயர்வை மட்டுமே இலக்காக கொண்டுள்ளது என்றார்.விலைவாசி உயர்வுக்கு எதிரான யுத்தம் இன்னும் முடியவில்லை என்றார்.
உலகளவில் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக பணவீக்கம் உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 6.7%ஆக உயர்ந்துள்ளது. 4-ம் காலாண்டில் பணவீக்கம் 5.9%ஆக இருந்தது.இதுபற்றி பேசிய சக்தி காந்ததாஸ், ரிசர்வ் வங்கி கணித்தது போலவே பணவீக்கம் குறைந்துள்ளது என்றார். அடுத்த ஓராண்டில் பணவீக்கம் 4%க்கும் அதிகமாகவே இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் உலகளவில் நிலவும் அரசியல் நிகழ்வுகள் தான் இந்திய பொருளாதாரத்தின் முக்கிய காரணியாக கூறியுள்ளார். உலகளவில் நிலையற்ற பொருளாதார நாடுகளுக்கு மத்தியில் இந்தியா நிலையான வளர்ச்சி பெற்று வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். பருப்பு மற்றும் பால் விலைக்கு ஏற்றபடியே பணவீக்கம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.