யார் இந்த வைபவ் தனீஜா?
உலகளவில் கார் சந்தையில் பெரிய புரட்சியை ஏற்படுத்திய நிறுவனங்களில் டெஸ்லா நிறுவனத்துக்கு பெரிய பங்கு உண்டு,மஸ்கின் சிறப்பான முன்னெடுப்பில் மிகமுக்கியத்துவம் வாந்ததும் டெஸ்லா கார்தான். இந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக வைபவ் தனீஜா நியமிக்கப்பட்டுள்ளார். வெறும் 45 வயதாகும் வைபவ் ஏற்கனவே அந்த நிறுவனத்தின் தலைமை கணக்கு அதிகாரியாகவும் இருக்கிறார். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு டெஸ்லாவில் பணியாற்றத் தொடங்கினார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். 2016ஆம் ஆண்டு சோலார் சிட்டி என்ற நிறுவனத்தில் இவர் பணியாற்றியபோது டெஸ்லா நிறுவனம், சோலார் சிட்டியை வாங்கியது. இரண்டு நிறுவனங்களையும் இணைக்கும் பணியை வைபவ் சிறப்பாக செய்தார். 2021ஆம் ஆண்டு டெஸ்லாவின் இந்திய பிரிவு இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டிருந்தார். தொழில்நுட்பம், நிதி, சில்லறை, தொலைதொடர்புத்துறையில் இவருக்கு 20 ஆண்டுகள் அனுபவம் இருக்கிறது. டெல்லி பல்கலைக்கழகத்தில் காமர்ஸ் படித்தவர் ஆவார்.PriceWaterhouseCoopers என்ற நிறுவனத்தில் பணியாற்றிய அவர் பின்னாளில்அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார்.அண்மையில் டெஸ்லா அதிகாரிகள் அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்து ரகசிய பேச்சு நடத்திய நிலையில் டெஸ்லா நிறுவன தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார்.