வங்கிகள் வட்டி உயர்த்துவது ஏனோ?
கடந்த 17 மாதங்களுக்கும் மேலாக ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவே இல்லை. இந்த நிலையில் சில வங்கிகள் மட்டும் தங்கள் வட்டி விகிதங்களை மாற்றி அமைத்து வருகின்றன. ஐரோப்பிய மத்திய வங்கி ஏற்கனவே வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. மற்ற வங்கிகளும் வட்டிகளை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்தியாவில் பாரத ஸ்டேட் வங்கி, மகாராஷ்டிரா வங்கி உள்ளிட்ட வங்கிகள் தங்கள் டெபாசிட் தொகைகளை உயர்த்த சிறப்பு முகாம்களை நடத்தி வருகின்றன. 444 நாட்கள் பணத்தை முதலீடு செய்தால் பாரத ஸ்டேட் வங்கி 7,25 % வட்டி அளிக்கிறது. அதே நேரம் பரோடா வங்கி 399 நாட்கள் பணத்தை டெபாசிட் செய்தால் 7.25%வட்டி தருவதாக சிறப்பு சலுகை அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா வங்கியில் பணத்தை 666 நாட்கள் வைத்திருந்தால் அற்கு 7.15%வட்டி கிடைக்கும். கடன் மற்றும் டெபாசிட் தொகைகளில் உள்ள விகிதம் மாறுபடுகிறது. அதாவது இந்திய ரூபாயில் 100 ரூபாய் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது என்றால் அதில் 80 ரூபாயை வங்கிகள் கடனாக அளிக்கின்றன. சில வங்கிகளில் குறிப்பாக எச்டிஎப்சி வங்கியில் விநியோக விகிதம் 104 %ஆகவும், ஆக்சிஸ் வங்கியில் இது 90 %ஆகவும் இருக்கிறது. சமீபத்திய தரவுகளின்படி வங்கிகள் லோன் கொடுக்கும் விகிதம் 13.9% உயர்ந்துள்ளது. அதே நேரம் வங்கிகளில் டெபாசிட் செய்யும் விகிதம் வெறும் 10.6%ஆகவே இருக்கிறது. இதனால்தான் மத்திய ரிசர்வ் வங்கி, இந்திய வங்கிகள் டெபாசிட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநரே எச்சரித்த பிறகு வேறு வழியின்றி வங்கிகள், டெபாசிட்டில் கவனம் செலுத்தி வருகின்றன. லாபத்தை கணக்கில் கொள்ளாமல் வங்கிகள் டெபாசிட்டில் அதிக கவனம் செலுத்துகின்றன.