ரிலையன்ஸில் முதலீடு செய்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க காரணம் என்ன?
ரிலையன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சவுதி அரேபியாவைச் சேர்ந்த யாசிர் அல் ருமாயன் என்பவர் சுதந்திரமான இயக்குநராக இறுக்கிறார். இவர் 25 விழுக்காடு நிறுவனத்தின் போர்ட் மீட்டிங்கிற்கு வரவே இல்லை என்பதால் பங்குதாரர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அவரை இயக்குநர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர்ம மீண்டும் அந்த பதவிக்கு வரக்கூடாது என்றும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதேபோல் ஹயகிரீவே கைதான் என்பவரையும் சுதந்திரமான இயக்குநராக நியமிக்க கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இவரும் ஏற்கனவே பல நிறுவனங்களில் இயக்குநராக இருப்பதால் ரிலையன்சுக்கு முழுநேரமாக கவனம் செலுத்தி வேலை செய்ய மாட்டார் என்றும் புகார் எழுந்துள்ளது.
2021 ஆம் ஆண்டே அல் ருமாயனை நியமிக்க 5 விழுக்காடு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது இந்த விகிதம் 40%ஆக உயர்ந்துள்ளது. எதிர்ப்பையும் மீறி இருவரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசில் 14 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் முகேஷ் அம்பானி அவரின் மூன்று வாரிசுகளான ஆகாஷ், இஷா, ஆனந்த் அம்பானி மற்றும் ஹிட்டல் மெஸ்வானி ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். விதிகளை மீறிதான் இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் மீது புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது பற்றி செய்தி நிறுவனங்கள் விளக்கம் கேட்டபோது ரிலையன்ஸும், அராம்கோ நிறுவனமும் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.