ஏண்டா வெந்த புண்ணுல வேல பாய்ச்சுறீங்க!!!!
ஹிண்டன்பர்க் அறிக்கையால் சிதைந்த அதானி குழுமம் மீண்டு எழுந்து வரத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் சாவரின் வெல்த் ஃபண்டில் இருந்து அதானி குழுமத்துக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி அளிக்கப்படுவதாக தகவல் பரவியது.இந்த சூழலில் எந்த கடனும் பெறவில்லை என்று அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எந்த நிதியுதவியும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ள அதானி குழுமத்தினர், ஹிண்டன்பர்க் அறிக்கையால் சுமார் 12 லட்சம் கோடி ரூபாயை அதானி குழுமம் இழந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் பங்குச்சந்தையில் உள்ள கடனில் 690 முதல் 790 மில்லியன் டாலரை அடைக்க இருப்பதாக கூறியுள்ள அதானி குழுமம், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் இருந்து நிதியை முதலீடாக பெற இருக்கிறது என்கிறது அந்த நிறுவன வட்டாரங்கள். இந்த தகவல் வெளியானதும் அதானி குழுமத்தில் உள்ள 10 நிறுவன பங்குகளும் ராக்கெட் வேகத்தில் மீண்டும் ஏற்றம் கண்டன. பழைய விலையை விட அதானி குழும பங்குகள் 200 ரூபாய் வரை மார்ச் 1ம் தேதி ஏற்றம் கண்டிருந்தன.