அதானி குழும பங்குகள் ஏன் அதிகரிக்கின்றன?!!
கடந்த 2004ம் ஆண்டு முதல் இந்திய பங்குச்சந்தைகளில் மிகப்பெரிய வளர்ச்சியை காட்டி வரும் கவுதம் அதானியின் அதானி குழுமம், வெகு சில ஆண்டுகளில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியமாக உருவெடுத்துள்ளது. எனினும் இது எப்படி சாத்தியம் என்று அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் பல்வேறு புகார்களை அதானி குழுமம் மீது முன் வைத்தது. இதில் எந்த புகாரையும் அதானி குழுமம் ஏற்கவே இல்லை..மாறாக கடன்களை அடைக்க வளைத்து வளைத்து பெரிய கடன்களை வாங்கி முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற முயற்சித்து வருகிறது. இந்த சூழலில் அதானி குழும நிறுவனங்களில் 4 நிறுவனங்களில் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி முதலீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. எல்ஐசி 4 நிறுவனங்களை குறிவைக்கும் அதே நேரத்தில் சில்லறை முதலீட்டாளர்கள் 8 நிறுவனங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். Adani Green Energy, Adani Total Gas,Adani Enterprises, Adani Transmission. ஆகிய நான்கு நிறுவனங்கள்தான் அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீடு செய்ய குறிவைக்கும் பிரதான நிறுவனங்களாக உள்ளன. 4.23%-ல் இருந்து தற்போது 4.26% முதலீடுகளை எல்ஐசி மேற்கொள்ள தீவிரம் காட்டப்படுகிறது. அதே நேரம் அம்புஜா சிமென்ட்ஸ், அதானி துறைமுக பங்குகளில் இருந்து எல்ஐசி தனது பங்குகளை குறைத்தது வருகிறது. புகாருக்கு ஆளாகி பெரிய சரிவு ஏற்பட்ட காலகட்டமான கடந்தாண்டு டிசம்பர் முதல் கடந்த மாதம் வரையிலான 4 மாத காலகட்டத்தில் அதானி குழும நிறுவனங்கள் 1.86% உயர்ந்திருக்கிறது. அண்மையில் கைப்பற்றப்பட்ட என்டிடிவி பங்குகள் மீதான முதலீடுகளும் கணிசமாக உயர்ந்துள்ளன. அமெரிக்க ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பிறகு GQG நிறுவனம் அதானி குழுமத்துடன் கைகோர்த்துள்ளதால் சரிந்து கிடந்த அதானியின் நிறுவனபங்குகள் முன்னேற்றப்பாதைக்கு திரும்பியுள்ளன.