ரிசர்வ் வங்கி கடுமை காட்டுவது ஏன்?
இந்திய வங்கிகள் மற்றும் வங்கி சார்ந்த நிதி நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி அடுத்தடுத்து புகுத்தி வருகிறது. இதனால் தங்கள் வருவாய் பாதிக்கப்படுவதாக நிதி நிறுவனங்கள் புலம்பி வருகின்றன.5 விழுக்காடு வரை பணத்தை தனியாக எடுத்து வைக்கும்படி அண்மையில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதாவது இதற்கு முன்பு வரை பல்வேறு காரணங்களால் 0.4 விழுக்காடு அளவுக்கு மட்டும் பணத்தை நிறுவனங்களும், வங்கிகளும் எடுத்து வைத்து வந்த நிலையில் இதனை தற்போது 5 விழுக்காடாக உயர்த்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. வாராக்கடன் அதிகரிக்கும் என்பதை உணர்ந்துதான் ரிசர்வ் வங்கி இப்படி முடிவுகளை அதிரடியாக எடுப்பதாகவும், வங்கிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பாரபட்சமே பார்க்காமல் அனைத்து தரப்பினருக்கும் ஒரே மாதிரியான விதியை ரிசர்வ் வங்கி முன் வைத்துள்ளது. கடந்த அக்போடரில் பேங்க் ஆஃப் பரோடாவுக்கு ரிசர்வ் வங்கி பல கட்டுப்பாடுகளை விதித்தது இந்த கட்டுப்பாடுகள் பின்னர் நீக்கப்பட்டது. இதேபோல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட பிரச்சனைகளை எச்டிஎப்சி நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்தது. பஜாஜ் பைனான்ஸ், ஐஐஎப்எல், பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் ஆகியவையும் ரிசர்வ் வங்கியின் பிடியில் இருந்து தப்பவில்லை. அடுத்தடுத்து நிறுவனங்களை குறிவைத்து வரும் ரிசர்வ்வங்கியால் தங்கள் ஆதாயம் , பண வரத்து ஆகியவை குறையும் என்றும் வணிகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்,