4 லட்சம் பேருக்கு வேலை போகப்போகுதா?
2035 ஆம் ஆண்டு,ஆற்றல் துறையில் ஒரு நாளைக்கு 100 பேருக்கு ஆற்றல் துறையில் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. படிம எரிபொருள் படிப்படியாக குறைக்க உலக நாடுகள் திட்டமிட்டுள்ளன. இந்த நிலையில் சுரங்கத்தொழிலை நம்பியுள்ள 4 லட்சம் பேருக்கு வேலை போய்விடும் என்றும் அஞ்சப்படுகிறது. 2050 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் வாய்ப்புள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் மக்கள் படிப்படியாக படிம எரிபொருளுக்கு பதிலாக சோலார் மற்றும் காற்றாலை மின்சாரத்தின் பக்கத்தை திருப்பியுள்ளனர்.அமெரிக்கா,ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகள் இதில் ஆட்டோமேஷன் என்ற தானியங்கி திட்டமாக மாறி வருகின்றன. உலகளவில் மூன்றில் 2 பாகம் சீனாவில் இருந்துதான் படிம எரிபொருள் கிடைக்கிறது. சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் மட்டும் இந்த சுரங்கப்பாதைக்காக 2லட்சத்து 40 ஆயிரம் பேர் பணியில் இறுக்கின்றனர். இதே போன்றதொரு பாதிப்பு நோக்கிய பயமம் கோல் இந்தியா நிறுவனத்திலும் தொடரும் என்று அஞச்ப்படுகிறது. கடந்த 2017-ல் 3.10 லட்சமாக இருந்த பணியாளர்கள் எண்ணிக்கை இந்தாண்டு 2 லட்சத்து 40 ஆயிரம் பேராக சரிந்துள்ளது. ஆண்டுக்கு 13 முதல் 14 ஆயிரம் பேர் வரை வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.