வெளிநாட்டு முதலீடுகள் இத்தனை அதிகரிப்பா?
மே 26ஆம் தேதி வரையிலான நிலவரப்படி இந்திய பங்குச்சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு மட்டும் 37ஆயிரத்து317 கோடி ரூபாயாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கான உயர்வாகும்.இந்த அளவானது ஒரே மாதத்தில் மட்டும் பதிவானதாகும்.ஆட்டோமொபைல்,சுகாதாரம் தொலைத்தொடர்புத்துறை,நிதித்துறையில்தான் அதிக முதலீடுகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் செய்து வருகின்றனர். இந்தியா,ஜப்பான்,தைவான்,தென்கொரியாவைப்போலவே இந்திய பங்குச்சந்தைகள் சிறப்பாக செயல்படுவதாக கூறும் நிபுணர்கள், வளர்ந்த நாடுகள் வளர்ச்சியில் தடுமாறுவதாகவும் கூறுகின்றனர். ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரிப்பு,பணவீக்கம் குறைந்து வருவது,ஆகியன உள்ளூர் சந்தைகளில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகப்படும்போதும் அது தேசிய பங்குச் சந்தைக்கு வலுசேர்க்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தை ஒப்பிடும்போது நடப்பு மாதத்தில் இந்தியாவின் பக்கம் பல நாட்டு முதலீட்டாளர்கள் கவனம் திரும்பியுள்ளது.இன்னும் இந்த மாதத்தில் 3 வேலை நாட்கள் இருப்பதால் முதலீடுகள் மேலும் அதிகரிக்கத்தான் செய்யும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்திய சந்தைகள் ஏற்றம் கண்டுவருவது புதிய உச்சங்களை தொடவும் உதவி வருகிறது.