இன்போசிஸ் பங்கு இன்னும் சரியுமா?
வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை(ஏப்ரல் 17ம் தேதி )இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 15% சரிந்தது. இதன் காரணமாக அந்த நிறுவனத்தின் முதலீட்டு மூலதனம் 73 ஆயிரத்து 60 கோடி ரூபாய் இழப்பு நேரிட்டது. ஏன் இந்த திடீர் சரிவு என்று ஆராய்ந்த நிபுணர்கள் இன்போசிஸ் நிறுவனம் எதிர்பார்த்த அளவுக்கு ஐடி துறையில் வளர்ச்சியை அளிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதுவும் கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் வளர்ச்சி குறைந்ததே காரணமாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்பது 1,219 ரூபாய் என்ற அளவில் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிவை கண்டுள்ளது. தேசிய பங்குச்சந்தையில் இன்போசிஸ் நிறுவன பங்குகள் 14விழுக்காடு சரிவு காணப்பட்டது. இன்போசிஸ் மட்டுமின்றி பிற பெரிய ஐடி நிறுவனங்களான டெக் மகேந்திரா, எச்சிஎல்,டிசிஎஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களிலும் 3 முதல் 6% சரிவு காணப்பட்டது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடி காரணமாக இன்போசிஸ் நிறுவனத்துக்கு வேலை அளிக்கும் அமெரிக்க கிளைணட்களின் எண்ணிக்கை கடுமையாக சரிந்ததே இந்த பாதப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. கடைசியாக கடந்த 2019ம் ஆண்டுதான் இன்போசிஸ் நிறுவனம் ஒற்றை இலக்கத்தில் வளர்ச்சி எண்ணிக்கையை காட்டியது, இது தற்போது மீண்டும் வந்துள்ளதால் இன்போசிஸ் நிறுவன வளர்ச்சி சரிந்து, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழந்துள்ளது.