ஈரான்-இஸ்ரேல் போரால் எண்ணெய் உற்பத்தி பாதிக்கும்?
ஈரான்-இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை விரைவில் உயரும் அபாயம் இருக்கிறது. இந்நிலையில் உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஈரானின் பங்கு மட்டும் 3.3 விழுக்காடாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி 20 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. அதாவது ஒரு நாளைக்கு 3.4 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. ஓபெக் எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் ஈரான் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. சீனர்கள் அதிகம் கச்சா எண்ணெயை ஈரானிடம் இருந்து வாங்கி வருகின்றனர். கடந்தாண்டு போலவே இந்தாண்டும் சீனர்களுக்கு அதிக கச்சா எண்ணெய் அதாவது 1.68 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்கின்றனர். ஈரானிய கச்சா எண்ணெய் விற்பனையை அழிக்கும் நோக்கில் அமெரிக்கா ஈரான் மீது பல்வேறு தடைகளை விதித்து உள்ளது. போருக்கு நடுவே கச்சா எண்ணெய் உற்பத்தியை ஈரான் அதிகரிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால் அதற்கான பதில் ஈரானிடமே உள்ளது. 2031 ஆம் ஆண்டுக்குள் 5.7 பில்லியன் பேரல் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்ய இருப்பதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானிய கச்சா எண்ணெய் உற்பத்தி சரிந்தால் சர்வதேச சந்தையில் 5 முதல் பத்து டாலர் வரை விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.