நெட்பிளிக்ஸ் சந்தா விலை உயரப்போகுதா?
அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் பிரபல நிறுவனம் நெட்பிளிக்ஸ், ஊர் உலகமே கொரோனா காலகட்டத்தில் வீட்டில் முடங்கிக்கிடந்த சூழலில்,இந்தநிறுவனம் அசுர வளர்ச்சி கண்டது.தற்போது மெல்ல மெல்ல மக்கள் இயல்புவாழ்கைக்கு திரும்பியுள்ளதால் இந்த நிறுவனத்தின் பிசினஸ் டல் அடிக்கிறது. இதனால் என்ன செய்யலாம் என்று யோசித்துள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள், ஆண்டுக்கு 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை மிச்சம்பிடிக்க என்னவெல்லாம் நடைமுறையோ அத்தனையையும் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக அந்த நிறுவனத்தில் வேலைக்கு இருந்த ஆட்களை ஆட்குறைப்பு செய்யவும்,புதிதாக ஆட்களை எடுப்பதை நிறுத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு பாஸ்வேர்டை ஏராளமானோர் பயன்படுத்துவதால் நெட்பிளிக்ஸ் வருமானம் கணிசமாக குறைந்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் கனடா,நியூசிலாந்து,போர்ச்சுகல்,ஸ்பெயின் ஆகிய நாடுகளில் மக்கள் பாஸ்வேர்டுகளை பகிர்ந்தால் அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தையும் நெட்பிளிக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இந்த திட்டம் வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சிக்கன நடவடிக்கையாக கடந்தாண்டு நவம்பரில் கொஞ்சம்பேரை இந்த நிறுவனம் தூக்கியிருந்தது. இந்த சூழலில் புதிய விதிகள் அமல்படுத்தப்பட இருக்கின்றன.இதன் விளைவாக நெட்பிளிக்ஸ் சந்தா உயரவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.