பெட்ரோல் விலை குறையுமா? குறையாதா???
சர்வதேச கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் இந்தாண்டின் மிகக்குறைந்த அளவை எட்டியுள்ளது. ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதி செய்ய இருக்கும் கச்சா எண்ணெய் விலைக்கு ஜி 7 நாடுகள் உச்சபட்ச விலை நிர்ணயம் செய்திருந்தனர், இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் புழக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் விலை 78.30 டாலராக சரிந்துள்ளது, சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணெய் சரிவுக்கு பாதகமாக எந்த காரணிகளும் இல்லை என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சீனாவில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் நிக்கப்பட இருக்கும் சூழலில் கொரோனாவுக்கு முன்பு இருந்த சூழல் திரும்பியிருக்கிறது. கச்சா எண்ணெய்யின் விலை குறைந்திருக்கக்கூடிய நிலையில் பெட்ரோல் டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.