என்னது இந்தியாவுக்கு டெஸ்லா வருதா…
உலகளவில் பிரபல நிறுவனங்களில் ஒன்றான டெஸ்லா நிறுவன அதிகாரிகள் அண்மையில் இந்தியாவுக்கு வந்து சென்றனர். இதில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ஆண்டுக்கு 5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு பெரிய ஆலையை இந்தியாவில் நிறுவ டெஸ்லா நிறுவனம் தனது பூர்வாங்க பணிகளை செய்து வருகிறது.இதற்கான முதலீட்டு ஒப்பந்தத்தை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவுக்கு அதிக கார்களை ஏற்றுமதி செய்யும் திட்டத்தில் மஸ்க் தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மதிப்பில் 20 லட்சம் ரூபாய் அளவில் புதிய டெஸ்லா கார் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் எம்ஜி நிறுவனத்தின் காமெட்,டாட்டா நெக்சான் ஈவி ஆகிய கார்களின் விலையை விட டெஸ்லாவின் கார் இருமடங்கு விலை நிர்ணயித்துள்ளது.
மின்சாரவாகனங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தால் அதற்கு இறக்குமதி வரியாக 100விழுக்காடு வரியை கூடுதலாக செலுத்த இந்திய அரசு கடந்தாண்டு திட்டமிட்டு வந்தது. இதனால் கடந்தாண்டே துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை. இந்தியாவில் டெஸ்லா கார்களை உற்பத்தி செய்ய இந்திய அரசு திட்டமிட்டு வரும் சூழலில் ஆனால் முதலில் கார்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து இந்திய சந்தையின் எதிர்பார்ப்பு எவ்வளவு என்பதை டெஸ்லா சோதிக்க முடிவு செய்துள்ளது. மின்சார கார்கள் உற்பத்தியை இந்தியாவிலேயே செய்தால் பேட்டரி மற்றும் சார்ஜிங் உபகரணங்களுக்கு ஊக்கத் தொகையை மத்திய அரசு தர இருப்பதால் டெஸ்லா நிறுவனம் சற்று இறங்கி வந்ததாக கூறப்படுகிறது. அண்மையில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்த மஸ்க், இந்தியாவில் பெரிய முதலீடு செய்ய இருப்பதாக கூறியிருந்த நிலையில், புதிய தகவல் டெஸ்லா கார் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது