10,000 ரூபாய் நோட்டு வருமா?
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கடந்த 2016-ல் ரிசர்வ் வங்கியால் கடைசி நேரத்தில் அச்சிடப்பட்டன. இது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், அது தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த சூழலில் கருப்புப்பணத்தை பதுக்க 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிறந்த வழியாக இருந்ததாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடியிருந்தார். உண்மையில் அதிக மதிப்பு கொண்ட நோட்டுகளை குறைக்கவே விரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு பதிலாக 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் திட்டமும் இருந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2014ஆம் ஆண்டே 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் திட்டம் இருந்ததாக ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தபோது இந்த திட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. ரகுராம் ராஜனின் 5,000 மற்றும் 10 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் முடிவை அப்போதைய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெய்ட்லி முற்றிலுமாக தவிர்த்ததாகவும் 2016-ல் 2,000 ரூபாய் நோட்டுகளுக்கான முடிவு எட்டப்பட்டு ஜூன் மாதத்தில்தான் அச்சிடவே தொடங்கியதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அச்சடிக்க எளிதாக இருக்கும் என்றாலும் 5,000 மற்றும் பத்தாயிரம் ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகள் அதிகம் புழங்கும் என்று கடைசி நேரத்தில் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே 1938-ல் இந்தியாவில் பத்தாயிரும் ரூபாய் நோட்டு இருந்துள்ளது. 1946-ல் அது பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதுடன் 1954-ல் மீண்டும் கொண்டுவரப்பட்டது. ஆனால் 1978ஆம் ஆண்டு பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள் மீண்டும் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டன. மண்மோகன் சிங் ஆட்சிகாலத்தில் ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தபோது, இந்திய பணவீக்கம் 10.70 வரை இருந்துள்ளது.