அதானி குழுமத்துக்கு கடன் தர மறுப்பா?
சர்ச்சையில் சிக்கியுள்ள அதானி குழுமத்துக்கு கடன் தரும் அளவு குறித்து பாரத ஸ்டேட் வங்கி பரிசீலித்து வருகிறது. அசுர வளர்ச்சி அடைந்த அதானி குழுமத்துக்கு போட்டி போட்டுக்கொண்டு வங்கிகள் கடன் தந்தன. ஆனால் தற்போது அதானி குழுமத்தின் பங்குகளில் 4-ல் 3 பங்குகள் சரிந்து விழுந்துள்ள நிலையில், எவ்வளவு வரை கடன் தரமுடியும், அதானி குழுமத்தின் நிலை என்ன என்று வங்கிகள் ஆய்வுக்கூட்டம் நடத்தினர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் 13 ஆயிரத்து 900 கோடி ரூபாய் வரை கடனை அதானி குழுமத்துக்கு தர வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பதிலேயே அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கிதான் அதிகபட்சமாக அதானி குழுமத்துக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தந்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையில் இதுவரை 124 கோடி ரூபாயை இழந்துள்ள அதானி குழுமம், பணத்தை திரும்ப அளிக்கும் என்று நம்பிக்கையில் வங்கிகள் உள்ளதாக கூறியுள்ளனர். அதானி குழுமத்தின் மொத்த வங்கிக் கடன் 26,000 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமத்தின் பெரிய திட்டமாக கருதப்படும் ஹெட்ரஜன் உற்பத்தி தடை பட்டுள்ளது. டோட்டல் நிறுவனத்துடன் இணைந்து அதானி குழுமம் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்ய திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் மதிப்பு மட்டும் 50 பில்லியின் டாலராகும்.