கச்சா எண்ணெய் விலை உயருமா?
கச்சா எண்ணெய் விலை குறித்து அந்த துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலர் வரை உயர்ந்தால் அது பெரிய பிரச்னையை ஏற்படுத்தும் என்றார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர்,கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை, ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்பதை மறைமுகமாக சாடியுள்ளார். அப்படி கச்சா எண்ணெய் விலை 100டாலர்களை கடந்தால்அது பல நாடுகளில் ஒழுங்குபடுத்தப்பட்ட கலேபரத்தில் முடியும் என்றும் சாடியுள்ளார். பிரெண்ட் ரக கச்சா எண்ணெய்கள் ஏற்கனவே 97 டாலர் வரை சென்றுள்ளது. உற்பத்தியை குறைப்பதாக ரஷ்யாவும்,சவுதி அரேபியாவும் அறிவித்ததால்தான் இந்த பிரச்னை ஏற்படுகிறது. எண்ணெயை அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் நிலையை கருத்தில் கொண்டு ஒரு சமநிலையை எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் வைக்க வேண்டும் என்றும் ஹர்தீப் சிங் கோரியுள்ளார். இந்தியாவால் விலையேற்றத்தை சமாளிக்க ஓரளவு முடியும் என்று கூறியுள்ள மத்திய அமைச்சர்,சில நாடுகளால் இது முடியாது என்றார். இந்தியாவிற்குள்ளேயேயும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார். கடந்த 18 மாதங்களில் கச்சா எண்ணெய் விலை உயர்வால்10 கோடி மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றார். கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பது மீண்டும் 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலையை திரும்ப கொண்டுவரும் என்றும் ஹர்தீப் சிங் எச்சரித்துள்ளார். இந்தியாவி் கச்சா எண்ணெய் 85%இறக்குமதி செய்யப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மட்டுமின்றி, ஹைட்ரஜனை எரிவாயுவாக மாற்றினால் அதுவும் எரிபொருள் தேவையை குறைக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.