நிலைமை இன்னும் சிக்கலாகுமா?
அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் பிரபலமான நிறுவனமாக திகழ்கிறது. ஜே.பி.மார்கன் நிறுவனம். அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக திகழ்கிறார் ஜேமீ டிமான். அண்மையில் ஏற்பட்டுள்ள வங்கி திவால் பிரச்சனை குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் ஏற்கனவே இருக்கும் பொருளாதார மந்த நிலையை இன்னும் சிக்கலாக்கும் பிரச்னையாக வங்கிகள் சரிவை பார்ப்பதாக கூறியிருக்கிறார். சிலிக்கான் வேலி போன்ற மிகப்பெரிய வங்கிகள் திவாலானது மட்டுமின்றி அடுத்தடுத்த பல வங்கிகள் இப்படி மாறக்கூடும் என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளார். தற்போதைய சூழலில் வங்கிகள் திவாலாகும் பிரச்னை முடிவுக்கு வரும் என்று தாம் நம்புவதாகவும் ஜேமீ தெரிவிக்கிறார்.அதிகரிக்கும் வட்டி விகிதங்களால் ஏற்கனவே வாங்கிய கடன் பத்திரங்கள் மதிப்பு குறைவதாக கூறிய அவர், மக்களின் வாங்கும் சக்தியை இந்த பிரச்னைகளை வெகுவாக பாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே சிக்கலில் சிக்கித் தவிக்கும் வங்கிகளுடன் அரசாங்கம் பேசி மேலும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்காமல் இருந்தால் போதும் என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டு முதல் ஜே.பி. மார்கன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜேமீ, 2008 பொருளாதார சரிவையும் நேரடியாக கண்டவர் என்பதால் அவர் தற்போதைய பொருளாதார மந்த நிலை குறித்து பேசியது கவனம் பெற்றுள்ளது.