இந்தியாவிலும் ரெஸஸன் வருமா?
பிரபல வங்கி தொழிலதிபரான கே.வி.காமத் பணவீக்கம் பற்றியும் வளர்ச்சி குறித்தும் பல கருத்துகளை முன்வைத்துள்ளார். அதில் சிலவற்றை இப்போது காணலாம்
1) கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இந்திய பொருளாதாரத்தை மிகச்சிறப்பாக சமாளித்துள்ளனர்.
2) எந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனம் சரிவதாலும் இந்தியாவில் மோசமான நிலை வராது.
3) டிஜிட்டல் தளங்கள் மூலம் இந்திய பொருளாதாரம் வளர அதிக வாய்ப்புள்ளது.
4) இந்திய உள்கட்டமைப்புகள் நன்றாக வளர்ந்துவிடும்,தனியார் பங்களிப்புடன் கட்டமைப்பு வளராது என்று கூறுவது தவறு.
5) வட்டி விகிதங்கள் உயர்வுக்கும்,பணவீக்கத்துக்கும் உள்ள தொடர்புகளை ஆராயவேண்டும்.
6) அரசு மற்றும் ரிசர்வ் வங்கி மீது முழு நம்பிக்கையை வைக்க வேண்டும்.
7) CPIஎனப்படும் சில்லறை பணவீக்கத்தை நன்கு அலச வேண்டியது அவசியமாக உள்ளது.
8) இந்தியாவில் உள்நாட்டு வளர்ச்சி சீராக இருக்கும், துறைமுகம் மற்றும் ரயில் நெட்வொர்க்குகள் இந்திய பொருளாதாரத்துக்கு புத்துயிர் அளிக்க வாய்ப்புள்ளது.
9) இந்திய பொருளாதாரத்துக்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வுக்கும் உள்ள தொடர்பு மிக சரியாக இருக்கவேண்டும்.
10) அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் பங்களிப்பு டிஜிட்டலில் இருந்து 20 முதல் 25%ஆக இருக்கலாம்.