ஏப்ரல் 1 முதல் இந்த கட்டுப்பாடு வருதா..??
டெப்ட் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் என்ற பரஸ்பர நிதியில் LTCG என்ற நெடுங்கால முதலீட்டு ஆதாயத்திற்கு வரி வசூலிக்கும் முறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்துள்ளது. அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிதி மசோதாவில் ஈக்விட்டி முதலீட்டில் 35விழுக்காட்டுக்குக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே இந்த புதிய வரி வசூலிக்கப்பட இருக்கிறது. எளிமையாக சொன்னால் மியூச்சுவல் பண்டில் டெப்ட் வகை பண்டில் முதலீடு செய்திருந்தால் அதற்கும் வருமான வரி செலுத்தவேண்டியிருக்கும். இந்த புதிய விதி வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே வரிச்சலுகை இந்த திட்டத்தில் கிடைத்து வந்தது. இதனை நீக்குவதே புதிய திட்டமாகும். வரி வரம்புக்குள் இந்த வகை மியூச்சுவல் ஃபண்டுகள் வருவதால் தங்கம் மற்றும் சர்வதேச நிதித்திட்டங்களிலும் பெரிய பாதிப்பு ஏற்படும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. நெடுநாட்களுக்கு எடுக்காமலேயே வைத்திருக்கும் ஃபண்டுகளில் இருந்து அதிகம் பேர் பணத்தை எடுத்து தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்ய வைப்பதே இந்த வரிவிதிப்பின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்பதும் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. இந்த வரி வசூல் திட்டத்தால் வங்கிகளுக்குத்தான் அதிக சாதகமான சூழல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. கடன்பத்திரங்களுக்கு இதனால் பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அறிவிப்பை அடுத்து,HDFC AMC,Aditya birla sunlife AMcஆகியவற்றின் மதிப்பு கணிசமாக குறைந்துள்ளன.