விடை பெற்றார் விப்ரோ சிஇஓ
விப்ரோ நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த தியர்ரி டெலபோர்டே பதவி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஸ்ரீனிவாஸ் பல்லியா அந்த பதவியை ஏற்கிறார். அமெரிக்காவின் 1 ஏரியா நிறுவனத்தின் சிஇஓவாக இருந்தார். இவர் தற்போது விப்ரோவின் மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக விப்ரோ நிறுவனத்தை திறம்பட தியர்ரி வழிநடத்தியதாக விப்ரோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஸ்ரீனியின் நியமணம் குறித்து விப்ரோ நிறுவன தலைவர் ரிஷத் பிரேம்ஜி தனது நல்ல அபிப்ராயத்தை தெரிவித்துள்ளார். தியர்ரி தலைமை செயல் அதிகாரியாக இருந்தபோது நல்ல உருமாற்றத்தை விப்ரோ நிறுவனம் சந்தித்ததாக கூறப்பட்டுள்ளது. பதவி விலகினாலும் தியர்ரி வரும் மே மாதம் வரை விப்ரோவில் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பதவியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து பேசியுள்ள ஸ்ரீனி, விப்ரோ நிறுவனம் அரிதானது என்றும், நோக்கமும் வருமானமும் கொண்ட அழகான நிறுவனம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 240000 பேர் பணியாற்றும் நிறுவனத்துக்கு தலைமையேற்பது பெரிய அம்சம் என்றும் ஸ்ரீனி கூறியுள்ளார்.