விப்ரோ நிறுவனம் முதலீடு..
விப்ரோ நிறுவனத்தின் தலைமைப்பதவியில் அசீம் பிரேம்ஜி உள்ளார். இவர் ஆஸ்திரேலிய கிராபிக்ஸ் நிறுவனமான கேன்வா நிறுவனத்தில் 50 முதல் 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. அண்மையில் கேன்வா நிறுவனத்தின் பங்குகள் 1.6 பில்லியன் அளவுக்கு கைமாறியிருந்தன. கேன்வா நிறுவனத்தில் தற்போது 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்வது மிகச்சரியான திட்டம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். கிராபிக்ஸ் நிறுவனத்தைப்போலவே செயற்கை நுண்ணறிவு மற்றும் ஹிப்போகிராடிக் ஏஐ உள்ளிட்ட நிறுவனங்களிலும் பிரேம்ஜிமுதலீடு செய்ய இருக்கிறார்.
ஹிபோகிராடிக் ஏஐ என்பது குரல் மூலம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தரவுகளை எளிதாக பெற முயற்சிகள் நடக்கின்றன. இந்த புதிய முதலீட்டுள் இந்தியா மற்றும் அமெரிக்காவில் செய்யப்படுகின்றன. லென்ஸ்கார்ட், தி ஸ்லீப் கம்பெனி, மாடெர்னா உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. கேன்வா மென்பொருளை இந்தியர்கள்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.இந்தியாவில்தான் அதிக கிரியேட்டர்கள் இருப்பதாகவும் பேஸ்புக்கில் அதிக குழுக்கள் இயங்குவதாகவும் கேன்வா நிறுவனம் தெரிவித்துள்ளது. அடோப், டிசைனர் ,போட்டோ மற்றும் அச்சிட தேவையான பொருட்களைவிடவும் மிகவும் எளிதாக இந்த கேன்வா மென்பொருள் இயங்கும் என்று கூறப்படுகிறது.இதனை மேமலும் வலுப்படுத்தவே அசீம் பிரேம்ஜி அதிக முதலீட்டை பெறும் கேன்வா நிறுவனத்துக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கிறது.