1ஆம் தேதி முதல் இதெல்லாம் அமல்:
இந்தியாவில் வரும் 1ஆம் தேதி முதல் சில மாற்றங்கள் அனைத்து துறைகளிலும் அமலாக இருக்கின்றன. வரும் 1ஆம் தேதி இந்தியாவில் 2,000 ரூபாய் நோட்டுகள் குறித்த புதிய அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிட இருக்கிறது. மேலும் சிறு சேமிப்புத் திட்டம் மற்றும் முதலீடுகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. ஆதார் பான் எண்களும் சில முக்கிய நிதி சேவைகளுக்கு தேவைப்பட இருக்கிறது. வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் இடம் இருந்து வசூலிக்கப்படும் புதிய டிசிஎஸ் வரியும் அமலாக உள்ளன. மருத்துவம் மற்றும் முக்கிய தேவைகள் தவிர்த்து மற்ற சேவைகளுக்கு வரிகள் உயர்வு பெற வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு பங்குச் சந்தையில் முதலீடு செய்யவும் விதிகள் வரும் 1ஆம் தேதி முதல் அமல் ஆகிறது.
இதேபோல் இந்தியாவில் பிறப்பு சான்றிதழ் அடிப்படை ஆவணமாக மாற உள்ளது.