டிசிஎஸில் இருந்து வெளியேறும் பெண்கள் ???
கொரோனா பெருந்தொற்று பலரின் வாழ்க்கையை புரட்டிப்போட்டிருந்தாலும், டெக் பணியாளர்கள் நல்ல சொகுசான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வந்தனர் என்றே சொல்லலாம். இந்த நிலையில் கொரோனா குறைந்து, மீண்டும் அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கத் தொடங்கியுள்ளன. இந்த சூழலில் அண்மையில் டிசிஎஸ் குறித்து ஒரு செய்தி வெளியானது. அதில் வீட்டில் இருந்து பணியாற்றும் வசதி குறைக்கப்பட்டு மீண்டும் அலுவலகம் வரச்சொன்னதால் ஏராளமான பெண் ஊழியர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டனர் என்பதே அந்த செய்தி.இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை மனிதவளப் பிரிவு தலைவர் மிலிந்த் லக்கார்டிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அளித்த பதில்கள் இதோ.. டிசிஎஸ் நிறுவனத்தில் மொத்தம் 6 லட்சத்து 14 ஆயிரம் பேருக்கும் அதிகமாக பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனத்தில் 35 விழுக்காடு பெண் பணியாளர்கள் இருக்கின்றனர். இந்தியாவிலேயே அதிக பெண் பணியாளர்களை கொண்ட நிறுவனமாக கடந்தாண்டு டசிஸ் நிறுவனத்தை பர்கண்டி ஹுருன் இந்தியா நிறுவனம் அறிக்கையும் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்து பணியாற்றும் பெண்களுக்கான வசதியை நீக்கியதால்தான் பெண்கள் வேலையை விட்டு போகிறார்கள் என்பதை நாங்கள் மறுக்கிறோம்.வேறு காரணிகளும் இருக்கலாம். அந்த நிறுவனத்தில் அட்ரிஷன் எனப்படும் வேலையை விட்டு பணியாளர்கள் விலகும் அளவு என்பது 20.1விழுக்காடாக உயர்ந்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தில் பெண்கள் அதிகளவில் வெளியேறியது உண்மை என்றும்,இது வழக்கத்துக்கு மாறானது என்றும் மிலிந்த் குறிப்பிட்டுள்ளார். அண்மையில்தான் அதாவது ஜூன் 1ஆம் தேதி தான் டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக கீர்த்திவாசன் பணியை தொடங்கியிருக்கிறார்.முன்பு இதே பதவியில் இருந்த ராஜேஷ் கோபிநாதனின் தலைமையில்தான் டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாயும்,கிளைண்ட் எண்ணிக்கையும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.