வீட்டிலிருந்து வேலை – சட்டத்திற்கு செனட் ஒப்புதல்?
நெதர்லாந்து நாட்டு பாராளுமன்றம், வீட்டிலிருந்து வேலை செய்வது சட்டப்பூர்வ உரிமை என்று மசோதாவை நிறைவேற்றியது. சட்டத்திற்கு செனட் ஒப்புதல் கிடைத்தால் வீட்டிலிருந்து வேலை செய்வது ஒரு உரிமையாக மாறும்.
தற்சமயம், நெதர்லாந்தில் உள்ள முதலாளிகள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி மறுத்தால் அதற்கான போதுமான காரணங்களைக் கூற வேண்டும்.
வீட்டிலிருந்து வேலை செய்வதை சட்டப்பூர்வ உரிமையாக்குவதற்கான மசோதா, 2015 ஆம் ஆண்டின் பணிச் சட்டத்தின் திருத்தமாகும். தற்போதுள்ள சட்டம், ஊழியர்களின் வேலை நேரம் மற்றும் பணியிடத்தில் மாற்றத்தைக் கோர அனுமதிக்கிறது.
உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகத்திர் இருந்து வேலைக்கு அழைத்து வந்தாலும், சிலர் அந்த யோசனையை அகற்றி விட்டு, வீட்டிலிருந்து வேலை செய்வதை புதிய இயல்பானதாக மாற்றியுள்ளனர்.