இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறீர்களா?
உலகளவில் பிரபல நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது இன்போசிஸ் நிறுவனம், இந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அண்மையில் பங்குகளை வாங்கிக்கொள்ளும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 5,11,862 பங்குகள் ஊழியர்களுக்கு என்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.இதனை இரண்டு பிரிவுகளாக வாங்கிக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.1,04,335 பங்குகள் 2015 பங்குச்சந்தை காம்பன்சேஷன் திட்டத்திலும், மீதம் 4,07,527 பங்குகள் விரிவாக்கப்பட்ட பங்கு ஓனர்ஷிப் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 400 கோடி பங்குகளை ஒரு பங்கு 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை நிலவரப்படி ஒரு பங்கின் விலை பங்குச்சந்தையில் 383 ரூபாய் 60 காசுகளாக இருந்தது.இன்போசிஸில் 5 லட்சத்து 11 ஆயிரம் ஊழியர்களுக்கும் இந்த பங்குகளை வாங்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.