உலகின் முதல் சிஎன்ஜி பைக்…
உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை பாஜாஜ் நிறுவனம் அண்மையில் சந்தை படுத்தியது. இந்த பைக்கின் விலை 95 ஆயிரம் ரூபாயில் இருந்து 1லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒரு மாதத்தில் 9லட்சம் மோட்டார் சைக்கிள் இந்தியாவில் விற்கப்படுவதாகவும் அதில் 1லட்சத்து 70 ஆயிரம் மோட்டர் சைக்கிள்களை பஜாஜ் நிறுவனம் விற்பதாகவும், 100 சிசி பைக் பிரிவில் பஜாஜ் மிகக்குறைவான அளவிலேயே பைக்குகளை விற்பதாகவும் அவர் தெரிவித்தார். 125 சிசியில் இரண்டாவது இடமும் வகிப்பதாக ராஜிவ் பஜாஜ் தெரிவித்தார். கடந்தாண்டு பஜாஜ் நிறுவனத்தின் நிகர லாபம் 7,708 கோடி ரூபாயாக இருந்தது. இதில் நிகர விற்பனை மட்டும் 44,870 கோடி ரூபாயாக இருந்தது. இது ஹீரோ நிறுவனத்தை விடவும் அதிகம், மேலும் டிவிஸ் நிறுவனம் இந்த காலகட்டத்தில் லாபமாக 1686 கோடி ரூபாயும், 39,145 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையும் செய்துள்ளது. சிஎன்ஜி பைக்குகளை அறிமுகப்படுத்தியது தோல்வியடைந்தால் என்ன செய்வீர்கள் என்று ராஜிவிடம் கேட்டபோது, சந்தையில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும், ஒரு வேளை தோல்வியடைந்தாலும் அடுத்தகட்ட நகர்வுக்கு தயாராக இருப்பதாகவும் ராஜிவ் குறிப்பிட்டார்.