டெஸ்லாவை முந்திக்கொண்ட ஷியாவ்மி..
உலகளவில் டெஸ்லா நிறுவன கார்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு போட்டியாக பிரபல ஸ்மார்ட் போன் உற்பத்தி நிறுவனமான ஷியாவ்மி தனது புதிய மின்சார பேட்டரி காரை விற்பனை செய்ய பணிகளை ஆயத்தமாக்கியுள்ளனர். டெஸ்லா நிறுவனம் தனது மாடல் ஒய் ரக காரை அடுத்தாண்டு சந்தைப்படுத்த உள்ள நிலையில், அவர்களுக்கு போட்டியாக எஸ் யு 7 என்ற மின்சார கார் உற்பத்தியில் ஷியாவ்மி தனது உற்பத்தியை தொடங்கியுள்ளது. 1 லட்சம் யூனிட்களை இந்தாண்டே உற்பத்தி செய்யவும் பணிகள் வேகமாக நடக்கின்றன. செல்போன் சந்தைகளை படிப்படியாக குறைத்துவிட்டு மின்சார கார்களில் அந்நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது. ஏற்கனவே டெஸ்லா மற்றும் பிஒய்டி நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இது தொடர்பாக விளக்கத்தை பெற முயன்றபோது ஷியாவ்மி நிறுவனம் பதில் ஏதும் அளிக்கவில்லை, ஷியாவ்மி நிறுவனத்தின் புதிய கார் 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது டெஸ்லாவின் மாடல் திரி மற்றும் போர்ஷே நிறுவனத்தின் டேகான் கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பீய்ஜிங்கில் உள்ள அந்நிறுவனத்தின் ஆலை மாதத்துக்கு 10 ஆயிரம் கார்களை மட்டுமே உற்பத்தி செய்ய திறன் கொண்டதாக உள்ளது. மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஷியாவ்மி எஸ்யுவி 7 ரக கார்களுக்கு இதுவரை 90ஆயிரம் ஆர்டர்கள் குவிந்துள்ளன. 2024 மூன்றாவது காலாண்டுக்கு பிறகு அதிகளவில் தங்கள் கார்களை ஏற்றுமதி செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.