12 விழுக்காடு சரிந்த எஸ் பேங்க்…!!
ஒரு காலத்தில் இந்தியாவில் பிரபல வங்கியாக வலம் வந்த எஸ் வங்கி தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கியதும் அந்த வங்கியின் பங்கு 12விழுக்காடு வரை சரிந்தது.
15 ரூபாய் 45 காசுகளாக இருந்த அந்த பங்கு 14 ரூபாய் 40 காசுகளுக்கு அந்த பங்கின் விலை வீழ்ந்துவிட்டது. 2020ல் இந்த வங்கி திவாலாக இருந்த நேரத்தில் பெரிய தொகையை கடன் கொடுத்து வங்கியை காப்பாற்றியது பாரத ஸ்டேட் வங்கி. இந்த நிலையில் ஸ்டேட் வங்கி முதலீடு செய்த தொகை வைப்பு வைக்கப்பட்ட லாக் இன் காலம் இன்றுடன் (திங்கள்கிழமை) முடிந்துவிட்டது. கடந்த வெள்ளிக்கிழமை வரை 5விழுக்காடு சரிந்திருந்த எஸ் வங்கி பங்குகள் இன்று பெரிதாக வீழ்ந்துவிட்டன. இந்த சரிவு விரைவில் சீராக்கப்படும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.கடந்த 2020ம் ஆண்டு பாரத ஸடேட்வங்கி,எச்டிஎப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட 8 நிறுவனங்கள் எஸ் வங்கிக்கு 10ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை அளித்திருந்தனர். இதன் விளைவாக கடந்த 3 ஆண்டுகளில் எஸ் வங்கியின் பங்குகளின் மதிப்பு 60விழுக்காடு உயர்ந்து இருந்தது. இந்த நிலையில் திவாலாகாமல் காப்பாற்றிய பாரத ஸ்டேட் வங்கியே தற்போது பணம் எடுக்க முடியாத அளவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு விலையும் கடுமையாக சரிந்தன. இதன் விளைவாக பங்குச்சந்தைகளில் மிகப்பெரிய அசாதாரண சூழல் காணப்பட்டது.