யெஸ் வங்கி புதிய குழுவை அமைப்பதற்கு பரிந்துரை
யெஸ் வங்கி தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கடுமையான இழப்பைக் கண்ட பின்னர், மாற்று வாரியத்தை உருவாக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளதாக, புதன்கிழமை தெரிவித்துள்ளது.
ஜூலை 15, 2022 அன்று நடைபெறவிருக்கும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (AGM,) பங்குதாரர்களின் ஒப்புதலுக்காக ஒரு புதிய குழுவை அமைப்பதற்கு அதன் தற்போதைய இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாக யெஸ் வங்கி கூறியது.
வங்கியின் மிகப்பெரிய பங்குதாரரான எஸ்பிஐ-யிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில், வாரியம் இப்போது மாற்று வாரியத்தை உருவாக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது என்று யெஸ் வங்கி புதன்கிழமை ஒரு ஒழுங்குமுறை தாக்கல் தெரிவித்துள்ளது.
புனரமைப்புத் திட்டத்தின் கீழ் பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் கீழ் மாற்று வாரியம் செயல்படும் என்று யெஸ் வங்கி தெரிவித்துள்ளது.
புனரமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியதில் இருந்து முக்கிய மைல்கற்களை எட்டியுள்ளதாக யெஸ் வங்கி கூறியது. வங்கியானது ஜூலை 2020 இல் மிகப்பெரிய பொது வெளியீடுகளில் ஒன்றின் மூலம் ₹15,000 கோடி ஈக்விட்டி மூலதனத்தை திரட்டியது.
இத் திட்டம் வங்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய உதவியது என்றும் FY22 இல் வங்கியின் முழு ஆண்டு லாபம் ₹1,066 கோடி என்றும் வங்கி தெரிவித்துள்ளது. 2020 மற்றும் 21ம் நிதியாண்டில் வங்கி பெரும் இழப்பை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.