யெஸ் பேங்க் லிமிடெட் மறுசீரமைக்க திட்டம்
ஜவஹர் கோயல் நிர்வாக இயக்குநராக நீடிப்பதைத் தடுக்க டிஷ் டிவி இந்தியா லிமிடெட் பங்குதாரர்களில் பெரும்பான்மையானவர்களை கடந்த வெள்ளிக்கிழமை யெஸ் பேங்க் லிமிடெட் சமாதானப்படுத்த முடிந்தது.
ஆனாலும் நிறுவனத்தின் ’ஆர்ட்டிகல்ஸ் ஆஃப் அசோசியேஷன்’ (AoA) மூலம் பாதுகாக்கப்பட்ட கோயல், நிர்வாகமற்ற இயக்குனராகத் தொடர்கிறார்.
கோயலை பதவி நீக்கம் செய்து, டிஷ் டிவியை மறுசீரமைக்க கிட்டத்தட்ட 10 மாதங்கள் போராடிய யெஸ் வங்கி, இப்போது இந்த பிரச்சினையில் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தை (SEBI) அணுக திட்டமிட்டுள்ளது, கோயலைத் தவிர, டிஷ் டிவியின் தற்போதைய குழுவில் ரஷ்மி அகர்வால் மற்றும் சங்கர் அகர்வால் என்று மூன்று சுயாதீன இயக்குநர்கள் உள்ளனர். நரங்கின் பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது
கடந்த வாரம், 78.9% பங்குதாரர்கள் கோயலை நிர்வாக இயக்குநராக மீண்டும் நியமிக்கும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். 21% பேர் ஆதரவாக வாக்களித்தனர். டிஷ் டிவியின் 5.93% பங்குகளை வைத்திருக்கும் கோயல், எஸ்ஸல் குழும நிறுவனர் சுபாஷ் சந்திராவின் இளைய சகோதரர் ஆவார்.