வெளிநாட்டு நிதிகளிலும் இனி முதலீடு செய்யலாம்..
இந்தியாவைச் சேர்ந்த ஒரு குடிமகன் , இனி வெளிநாட்டு நிதிகளில் கூட முதலீடு செய்யும் வகையில் ரிசர்வ் வங்கி, புதிய திருத்தம் ஒன்றை செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் உள்ள, நிதிகளின் முதலீட்டாளர் ஆக இந்தியர்கள் இனி செயல்பட முடியும். நிதியில் முதலீட்டை நேரடியாக செய்யும் வகையில் ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது இந்திய மக்களை குஷி படுத்தி உள்ளது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்ககாக தான் காத்திருந்தது ஆக முதலீட்டாளர்கள் மற்றும் நிதி ஆலோசகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான மொரீசியஸ் நாட்டில் இனி இந்தியர்கள் எந்த தடையும் இன்றி முதலீடு செய்யலாம் என அந்நாட்டு நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ரியல் எஸ்டேட், தனியார் நிதி என பல வகைகளில் இந்திய முதலீட்டாளர்கள் பயன் அடைய முடியும் என்று கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த திடீர் அறிவிப்பு, இந்திய முதலீட்டாளர் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது