2070 – வுக்குள் இந்தியாவில் பூஜ்ய கார்பன் உமிழ்வு – சாத்தியமா?
2070க்குள் இந்தியா கார்பன் பூஜ்ய உமிழ்வை சாத்தியப்படுத்த 10.1 ட்ரில்லியன் டாலர் முதலீடுகள் தேவை என சுற்றுச்சூழல், ஆற்றல் மற்றும் நீர் கவுன்சில்- எரிசக்தி நிதிக்கான மையம் (CEEW-CEF) கூறியிருக்கிறது. இந்தியாவின் ஆற்றல், தொழில் துறை மற்றும் போக்குவரத்து துறைகளை டீ – கார்பனேற்றம் செய்து அதன் நிகர பூஜ்ஜிய இலக்கை எட்ட 3.5 ட்ரில்லியன் டாலர் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்று அந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது.
அந்த ஆய்வு மேலும் குறிப்பிடுகையில் குறிப்பாக இந்தியாவின் மின் துறையை மாற்றுவதற்கு பெரும்பாலான முதலீடுகள் தேவைப்படும் என்று எடுத்துக்காட்டியது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒருங்கிணைப்பு, வினியோகம் மற்றும் பரிமாற்ற உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் உற்பத்தியை கணிசமாக அதிகரிக்க மொத்தம் 8.4 ட்ரில்லியன் டாலர்கள் முதலீடு தேவைப்படும் என்றும், தொழில்துறையில் 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது.
மேலும் இந்தத் துறையில் டி- கார்பனைசேஷன் செய்வதற்கு பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.