ரூபாயின் மதிப்பு நன்றாக உள்ளது – சக்திகாந்த தாஸ்
மற்ற நாடுகளின் நாணயத்துடன் ஒப்பிடுகையில் ரூபாயின் மதிப்பு நன்றாக உள்ளது என்றும், அந்நிய செலாவணி கையிருப்பு போதுமானதாக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் வெள்ளியன்று கூறினார்.
பாங்க் ஆஃப் பரோடாவால் ஏற்பாடு செய்யப்பட்ட வங்கி மாநாட்டில் உரையாற்றிய தாஸ், ”ரூபாயின் வலுவான சரிவுப் போக்கு, அந்நியச் செலாவணிக் கடன்களைப் பற்றிய கவலைகளுக்கு வழிவகுத்தது. சமீபத்தில் டாலருக்கு எதிராக ரூபாய், 80-த் தொட்டது. நாணயச் சந்தையில் ரிசர்வ் வங்கியின் தலையீடுகள் ரூபாயின் வீழ்ச்சியைக் குறைக்க உதவியுள்ளன” என்று கூறினார்.
“ரூபாயின் நகர்வுகள் ஒப்பீட்டளவில் சீராகவும் ஒழுங்காகவும் உள்ளன
இது ஒரு நிச்சயமற்ற சூழல், இவ்வளவு அவசரமாக எந்த முடிவுக்கும் நாம் செல்லக்கூடாது, பணவீக்கம் இப்போது அது 7% ஆக உள்ளது. எனவே, இது மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலையாகும்,” என்று அவர் கூறினார்.