மூன்று மாதங்களில் நஷ்டம் ₹360 கோடியாக அதிகரிப்பு- Zomato புதிய வியூகம்
பணத்தை சேமிப்பதற்குத்தான் தற்போது முன்னுரிமை அளிக்கிறோம் என்றும், மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் இழப்புகள் பெரிதாகி வருவதால், நிறுவனம் அதை தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும் Zomato இன் நிறுவனரும், சிஇஓவுமான தீபிந்தர் கோயல் கூறினார்.
ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் வருவாய் 75% உயர்ந்தாலும், நஷ்டம் ₹360 கோடியாக அதிகரித்ததால், நிறுவனத்தின் செலவுகள் ஏறக்குறைய இருமடங்காக அதிகரித்தன என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் சிறு பங்கு முதலீடுகளுக்கு தற்போது எந்த திட்டமும் இல்லை என்று நிறுவனம் கூறியுள்ளது.
Blinkit M&A ஒப்பந்தத்தில், $150 மில்லியன் வரையிலான குறுகிய காலக் கடனைத் தவிர, அவர்களின் குறுகிய கால மூலதனத் தேவைகளுக்கு நிதியளிக்க, இந்த கட்டத்தில் பகிர்ந்து கொள்வதற்கு அதிகம் எதுவும் இல்லை என்று நிறுவனம் கூறியது