கைமாறியது சொமேட்டோ பங்கு ..
பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோவின் பங்குகள் 1.1%வரை வேறு நபர்களுக்கு கைமாறியுள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு கணிசமாக உயர்ந்திருக்கிறது.1.1%பங்கு என்பது 9 கோடியே 28லட்சம் பங்குகளாகும்.ஒரு பங்கின் விலை 111.2 ரூபாய் என்ற அளவில் வெள்ளிக்கிழமை விற்பனை நடைபெற்றது. யார் யாரிடம் விற்றனர் என்ற விவரம் உடனடியாக வெளியாகவில்லை ஆனால் விற்பனை நடந்தது மட்டும் உறுதியாகியுள்ளது.சாப்ட் பேங் நிறுவனம் சொமேட்டோவில் உள்ள 9.3கோடி பங்குகளை ஆயிரத்து 24 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் மற்றொரு 1 விழுக்காடு பங்கு கைமாறியிருப்பது அந்நிறுவனத்துக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி இருக்கிறது.கடந்த ஆகஸ்ட்டில் சாப்ட் பேங்க் நிறுவனம் தனது 1.17%பங்குகளை சொமேட்டோவில் லாக் இன் காலம் முடிந்ததால் அதில் இருந்து விற்றுவிட்டது. இதன் விளைவாக இந்திய சந்தையில் சொமேட்டோ நிறுவனத்தின் இன்ட்ரா டே பங்குகள் இரண்டரை விழுக்காடு அதிகரித்துள்ளது.