எரிபொருள் விலை உயர்வுக்கு “ஆயில் பாண்டுகள்” எனப்படும் எண்ணெய் பத்திரங்களா காரணம்?
யுபிஏ காலகட்டத்தின் சிறப்புப் பத்திரங்களுக்கான செலவினங்கள் என்ன, பெட்ரோலிய பொருட்களுக்கான கலால் வரி மற்றும் இதர வரியிலிருந்து அரசு ஈட்டும் வருவாய் என்ன?
யுபிஏ அரசாங்கத்தால் வழங்கப்பட்ட எண்ணெய் பத்திரங்களின் வட்டி செலுத்தும் சேவைக்கு வெகுவாக செலவழிக்கப்படுவதால் ஒன்றிய அரசுக்கு தேவையற்ற அதிகப்படியான சுமை ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே தெரிவித்ததை மறுபடியும் தெரிவித்துள்ளார், மேலும் நுகர்வோர் மீதான சுமையை குறைப்பதற்காக பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரி மற்றும் பிற மத்திய வரிகளை குறைக்கும் அரசாங்கத்தின் எண்ணங்களை இந்த நிதி அர்ப்பணிப்பு, இறுக்கநிலையை ஏற்படுத்தி கட்டுப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 16 அன்று ஊடகங்களுடன் உரையாடிய திருமதி சீதாராமன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தந்திரமானது என்று குறிப்பிட்டதுடன் மேற்கொண்டு கூறியதாவது: “2013-ல் எண்ணெய் விலைகளைக் குறைத்து காண்பிப்பதற்காக ₹ 1.44 லட்சம் கோடி மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்கள் யுபிஏ அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. ஆனால் அதை யார் திரும்ப செலுத்துவது, மோடி அவர்களின் 2.0 அரசாங்கம் தான்” என்றும், அவர் மேலும் கூறியதாவது, “இன்று நீங்கள் என்னிடம், நாங்கள் ஏன் விலையை குறைக்கவில்லை என்று கேட்கிறீர்கள். அவர்கள் வழங்கிய தள்ளுபடிகளுக்கு மானியமாக அவர்களாலயே சுமற்றிவிடப்பட்ட கடன்களுக்கு நாங்கள் வட்டி செலுத்தி வருகிறோம். இதுவரை ₹ 1.31 லட்சம் கோடி மதிப்புள்ள நிலுவையில் உள்ள பத்திரங்களுக்கு ₹ 70,195.72 கோடி வட்டி வழங்கப்பட்டுள்ளது. 2025-26 வரை மேலும் ₹ 37,000 கோடி வட்டி செலுத்தப்பட வேண்டியுள்ளது, ஆக வட்டி மட்டும் 1 லட்சம் கோடிக்கு அருகில் எடுத்துச்சென்றுவிடுகிறது”.
எண்ணெய் பத்திரங்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு (ஓஎம்சி) மொத்தமாக ₹ 1.4 லட்சம் கோடி மதிப்பிலான நீண்ட கால சிறப்பு பத்திரங்களை அரசாங்கம் 2005 மற்றும் 2010 க்கு இடையிலான காலகட்டத்தில் வழங்கியது. இந்த கடன் பத்திரங்கள், 6.35% முதல் 8.4% வரையிலான கூப்பன் ரேட் எனும் வட்டிவிகிதத்தை கொண்டதாக வெளியிடப்பட்டது, பெட்ரோலியப் பொருட்களை அதன் உற்பத்தி விலைக்குக் குறைவாக விற்கப்படுவதால் ஓஎம்சி க்கள் தடுமாறிவிடாமல் மீட்புக்கு ஈடான ரொக்க மானியத்திற்கு பதிலாக பத்திரங்களின் வருடாந்திர வட்டியாக வழங்கப்பட்டன, மேலும் பத்திரங்கள் முதிர்ச்சியடைந்தவுடன், அதன் முக மதிப்பின்படியான தொகை அவர்களுக்கு சேரும். வருடாந்திர நிதிச் சுமையைக் குறைப்பதற்காகவும், நீண்ட காலத்திற்கு கடன் பொறுப்பை பிரித்து திரும்பச்செலுத்துவதற்கும் அப்போதைய அரசாங்கம் இந்தப் பத்திரங்களை வழங்க முடிவு செய்தது.
2010 வரை மட்டும் வெளியிடப்பட்டது இவ்வகை பாத்திரங்கள், அது ஏன்?
யுபிஏ அரசாங்கம் ஜூன் 2010-ல் எரிபொருள் இழப்பு மீட்பை கருத்தில் கொண்டு பெட்ரோலிய பொருள் விலை கட்டுப்பாட்டை நீக்கிக்கொண்டது, இதனால் அக்டோபர் 2014 முதல் ஓஎம்சிக்களுக்கான அவர்கள் விற்ற ஒவ்வொரு லிட்டர் எரிபொருளுக்குமான இழப்பை தவிர்க்க முடிந்தது. எண்ணெய் பத்திரங்கள் வழங்கப்பட்ட ஐந்து வருட காலப்பகுதியில், பெட்ரோலியம் பிளானிங் & அனாலிசிஸ் செல் (பிபிஏசி) வலைத்தளத்தின் தரவுகளின்படி, கச்சா எண்ணெயின் இந்திய தொகுப்பு விலை சராசரியாக 70.15 டாலராக இருந்தது. அதே காலகட்டமான ஜூலை 2008-ல் பெட்ரோலின் சில்லறை விற்பனை விலை குறைந்தபட்சம் ₹37.99 ஆகவும், உச்சபட்சமாக ₹50.62 வரையும் இருந்தது.
கச்சா எண்ணெய் விலைக்கும் சில்லறை எரிபொருள் விலைக்குமான தொடர்பு என்ன?
கச்சா எண்ணெய் சுத்திகரித்து ஒவ்வொரு பெட்ரோலிய பொருளை உருவாக்குவதற்கான விலையை தவிர, மத்திய மற்றும் மாநில வரி மற்றும் டீலர் கமிஷன்களும் பெட்ரோலியப் பொருட்களின் பம்ப் விலையில் சேர்க்கப்படுகின்றன. யுபிஏ அரசாங்கத்தின் ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்ட இந்திய தொகுப்பு கச்சா எண்ணெய் விலை 2004-2005-ல் சராசரியாக $39.21 தொடங்கி 2011-12 வாக்கில் $111.89 ஆக கடுமையாக உயர்ந்தது. மே 2014 இல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்பதற்கும் முன்பாக, 2013-14 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் சராசரியாக $105.52 விலையில் சற்று குறையத்தொடங்கி கிடைக்கப்பெற்றது. 2014-15 முதல், கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை ஆண்டு சராசரியான 84.16 டாலரிலிருந்து வீழ்ச்சியடைந்து 2020-21-ல் 44.82 டாலராக குறைந்தது. ஆயினும், கலால் வரி மற்றும் அதனுடன் தொடர்புடைய மத்திய வரிகள் செங்குத்தாய் உயர்த்தப்பட்டு, மே 2014-ல் 14% வரியை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று டெல்லியில் விற்கப்பட்ட பெட்ரோலின் பம்ப் விலை 32% அல்லது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக வரிகள் மட்டும் பூதாகாரமாகியுள்ளது. இதை தவிர மே 2014-ல் 17% இருந்த மாநில வரிகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, டெல்லியில் பம்ப் விலையில் 23% ஆக உயர்ந்துள்ளது.
அமைச்சரின் கருத்தும் அறிவிப்பும் பொருத்தமானது தானா?
பத்திரங்கள் தொடர்பாக இதுவரை செலவழித்ததை விட, கலால் வரி மற்றும் இதர வரியிலிருந்து அதிக வருமானத்தை தற்போதய ஒன்றிய அரசு தொடர்ந்து பெற்றுள்ளது. பிபிஏசி தரவுகளின்படி, கலால் வரி மூலமான அதன் வருவாய் மட்டும் 2014-15ல் ₹ 99,068 கோடியிலிருந்து 2015-16ல் ₹1,78,477 கோடியாக அதாவது இரு மடங்காக அதிகரித்துள்ளது, தவிர 2020-21ல் தற்காலிகமாக ₹ 3,71,726 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. மாறாக, கடந்த ஏழு ஆண்டுகளில் பத்திரங்களின் நிலுவைத் தொகை சொற்பமாகவே மாறியுள்ளது – மார்ச் 2014 வரை ₹1.34 லட்சம் கோடியிலிருந்து 2021 மார்ச் வரை ₹1.31 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது – அமைச்சர் கூறும் அவரது கணக்கின்படி செலுத்தப்பட்ட வட்டித் தொகை, ₹70,000 கோடிக்கு சற்று கூடுதல், இது சராசரியாக ஆண்டுக்கு சுமார் ₹10,000 கோடி மட்டுமே!
இந்த கணக்கு என்ன மந்திரம், இது யாரது தந்திரம்?