IPO மோகம்: பில்லியன்களை இந்தியாவுக்குள் கொட்டும் முதலீட்டாளர்கள்!
இந்தியாவில் ஆரம்பப் பொது வழங்கலுக்கான (Initial Public Offering) சந்தை நன்றாக உள்ளது. இந்த ஆண்டு IPO க்கள் மூலம் 8.8 பில்லியன் டாலர்கள் திரட்டப்பட்டது – இது கடந்த மூன்று வருடங்களின் மொத்த தொகையை விட அதிகமானது. இது தொடர்ந்தால் , 2021-ல் $ 11.8 பில்லியன் என்ற வரலாற்றில் இல்லாத சாதனை அளவை IPO தாண்ட வாய்ப்புண்டது.
இது அனைத்தும் சோமடோவினால் – ஜூலை மாதத்தில் சோமடோ பட்டியலிடப்பட்டது. பெரிய அளவிலான இழப்புகள் மற்றும் லாபமீட்டுவதற்கான குறைந்தளவு வாய்ப்புகளே இருந்த போதிலும், பங்குகளின் மதிப்பு 70% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
நீண்டகால நிதிச் சிக்கல்களில் இருக்கும் லாட்ஜிங் நிறுவனமான ஓயோ ஹோட்டல்ஸ் & ஹோம்ஸ் பிரைவேட் கடந்த வாரம் அதன் வரைவு திட்டத்தின் (draft prospectus) மீது வேலை செய்யத் தொடங்கியது. ஓலா மற்றும் fintech ஸ்டார்ட் அப் Pine Labs முதலீட்டு வங்கியாளர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக நிலைமையை அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
“சோமடோ IPO வின் வெற்றியானது, உண்மையில் இந்திய நிறுவனங்களின் கண்களைத் திறந்தது, இப்போது தனியார் நிதியுதவி பெற்று வணிகம் செய்யும் யூனிகார்ன்கள் அனைத்தும் பொதுச் சந்தைக்கு வருகின்றன” என்று சிட்டி குரூப் இன்க் – ஆசியா ஈக்விட்டி கேபிடல் சந்தைகளின் இணைத் தலைவர் உதய் கூறுகிறார். சோமடோ போன்ற சமீபத்திய ஐபிஓக்களின் வெற்றி உற்சாகத்தை ஊட்டியுள்ளது. புதிதாகப் பட்டியலிடப்பட்ட இந்தியப் பங்குகள், நிஃப்டி 50 குறியீட்டை, இந்த ஆண்டு 40 சதவிகித புள்ளிகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளது.
நாட்டின் மூன்று மதிப்புமிக்க தொடக்க நிறுவனங்கள் அனைத்தும் ஐபிஓக்களைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தைத் திட்டமிடுகின்றன. 166 பில்லியன் ரூபாய்களை (2.2 பில்லியன் டாலர்) திரட்டுவதை நோக்கமாகக் கொண்டு PayTM தனது ஆரம்ப சலுகை ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது. PayTM அந்த நிலையை அடைந்தால், அதன் ஐபிஓ நாட்டின் மிகப்பெரிய அறிமுகமாக இருக்கும், இது அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா லிமிடெட் மூலம் திரட்டப்பட்ட 150 பில்லியனை விடவும் பெரிது.
வால்மார்ட்டுக்கு சொந்தமான இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் விரைவில் ஐபிஓவை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது . 16.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள டிஜிட்டல் கல்வி நிறுவனமான Byju’s ஐபிஓ பற்றிய ஆரம்ப நிலை விவாதங்களில் உள்ளது என்று விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். Byju’s பல்வேறு நிறுவனங்களை வாங்கிக் கொண்டிருக்கிறது, எனவே குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்கு எந்தப் பட்டியலையும் மேற்கொள்ளாது.
ஃப்ளிப்கார்ட் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக PhonePe-வை வாங்கிய வால்மார்ட், உள்ளூர் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக சிங்கப்பூரிலிருந்து PhonePe-வின் இணைப்பை இந்தியாவுக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறது. சீனாவில் நிகழ்ந்து வரும் அரச ஒழுங்குமுறை நடவடிக்கைகள் முதலீட்டாளர்களை எளிய அரசாங்கக் கொள்கைகளைக் கொண்ட நாடுகளைத் தேடி அனுப்பியுள்ளது.