பாலிசி பஸார் முதல் அதானி வில்மார் வரை ! – அக்டோபரில் வெளிவரக்கூடிய ஐபிஓ-களின் பட்டியல் இதோ!
நிறுவனங்கள் தங்களது முதன்மைப் பொதுப் பங்குகளை வெளியிட 2021 ஒரு சிறந்த வருடமாக மாறி வருகிறது. நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் இருவருக்கும் முதன்மைப் பொதுப் பங்குகள் வெளியீடு (ஐபிஓ) நல்ல லாபத்தை ஈட்டிக்கொடுத்திருக்கின்றன. 2021 இல் 58 நிறுவனங்களின் ஐபிஓ-கள் ஏற்கனவே பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், இன்னும் பல நிறுவனங்கள் தங்களது ஐபிஓ-களை வெளியீடு தயாராகி வருகின்றன.
செப்டம்பர் மாதத்தில் 23 நிறுவனங்கள் தங்கள் டிராப்ட் சிவப்பு ஹெர்ரிங் ப்ப்ரஸ்பெக்டஸ் (DRHP) முன்வரைவை சந்தை கட்டுப்பாட்டாளரிடம் தாக்கல் செய்துள்ளதால் ஐபிஓ-கள் அதிகரித்து வருகின்றன. ஐபிஓ-களை வெளியிட பல நிறுவனங்கள் கட்டுப்பாட்டாளர்களின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சந்தையில் 13 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன, அவற்றில் பராஸ் டிஃபென்ஸ் & ஸ்பேஸ் டெக்னாலஜிஸின் ஐபிஓ 171% லாபத்துடன் மிகப்பெரிய வெற்றியை கண்டது.
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC), Paytm, Nykaa, PharmEasy, MobiKwik போன்ற நிறுவனங்கள் இந்த ஆண்டு தங்கள் ஐபிஓ-களை வெளியிட திட்டமிட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அக்டோபரில் வெளிவரக்கூடிய ஐபிஓ-களின் பட்டியல் இதோ.
பாலிசி பஸார் (PolicyBazaar)
இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் காப்பீட்டுத் நிறுவனமான பாலிசி பஸார் (PolicyBazaar) ஐபிஓ மூலம் 6,000 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது. காப்பீட்டை ஆன்லைனில் விற்பனை செய்வதில் முன்னணியில் PolicyBazaar உள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவின் காப்பீட்டுத் துறையில் மிகப்பெரிய பங்காற்றும் ஒன்றாகும்.
PolicyBazaar இந்த ஆண்டு இந்தியப் பரிவர்த்தனைகளைத் தொடங்கும், சில தொழில்நுட்ப ஐபிஓ-களில் ஒன்றாகும். இது நாட்டின் சிறந்த ஃபின்டெக் ஸ்டார்ட் அப்களில் ஒன்றாகும் – மற்றொன்று Paytm. PolicyBazaar இன் வருவாயில் 95% பாலிசிகளை விற்பனை செய்யும் காப்பீட்டு நிறுவனங்களின் கமிஷன்களிலிருந்து வருகிறது.
பரதீப் பாஸ்பேட்ஸ் லிமிடெட் (Paradeep Phosphates Limited)
இந்த உர உற்பத்தி நிறுவனம் தனது பங்குகளின் மூலம் 1,255 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது. 12 கோடிக்கும் அதிகமான பங்குகளை அதன் தற்போதைய பங்குதாரர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் மூலம் விற்பனை செய்ய உள்ளது.
இந்நிறுவனம் ஐபிஓ வின் வருமானத்தை கோவாவில் ஒரு உர உற்பத்தி தொழிற்சாலையைத் துவங்குவது,, சில கடன்களை அடைப்பது மற்றும் பொதுவான நிறுவன வளர்ச்சித் திட்டங்களுக்கும்பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. பரதீப் பாஸ்பேட்ஸ் லிமிடெட் (Paradeep Phosphates Limited) முதன்மையாக டைமமோனியம் பாஸ்பேட் (DAP) மற்றும் NPK உரங்கள் போன்ற பல்வேறு சிக்கலான உர உற்பத்தி, வர்த்தகம், விநியோகம் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது.
அதானி வில்மர் (Adani Wilmar)
அதானி வில்மர் (Adani Wilmar) என்பது வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் பிரபலமான சமையல் எண்ணெய் ‘Fortune’ க்கு பெயர் பெற்றது. அதானி வில்மர் (Adani Wilmar) தன் DRHP ஐ 4,500 கோடி ஐபிஓ விற்கு தொடங்க உள்ளது, சந்தைக் கட்டுப்பாட்டாளரிடம் அவ்வறிவு தாக்கல் செய்து அனுமதிக்காகக் காத்திருக்கிறது.
1999 இல் அதானி குழுமம் (Adani Group) மற்றும் சிங்கப்பூரை சார்ந்த வில்மர் (Wilmar) ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு நிறுவனம் தான் அதானி வில்மர் (Adani Wilmar) ஆகும். இது Fortune பிராண்டின் கீழ் சமையல் எண்ணெய், அரிசி மற்றும் சர்க்கரை போன்ற பல்வேறு உணவுப் பொருட்களை விற்பனை செய்கிறது.
கெவேண்ட்டெர் அக்ரோ ( Keventer Agro)
கெவேண்ட்டெர் அக்ரோ (Keventer Agro) நிறுவனத்தில் 6.16% பங்குகளை வைத்திருக்கும் Mandala Swede SPV 1.07 கோடி பங்குகளை விற்பனை செய்யும் சலுகையுடன் புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் கெவேண்ட்டெர் அக்ரோ (Keventer Agro) 350 கோடியை திரட்ட முயல்கிறது. குறிப்பிட்ட கடன்களை திருப்பிச் செலுத்துதல், மூலதன தேவைகள் மற்றும் பொது நிறுவன வளர்ச்சி நோக்கங்களுக்காக திரட்டப்பட்ட மூலதனத்தைப் பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் பேக்கேஜ் செய்யப்பட்ட, பால் மற்றும் உணவுப் பொருட்களில் நிபுணத்துவம் பெற்றது. இது Frooti, Appy, B Fizz, Appy Fizz, Bailley, Smoodh உள்ளிட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்து விற்பனைக்கு விநியோகிக்கிறது.
செவன் ஐலண்ட்ஸ் ஷிப்பிங் ( Seven Islands Shipping)
செவன் ஐலண்ட்ஸ் ஷிப்பிங் (Seven Islands Shipping) என்பது மும்பையை சார்ந்த கச்சா எண்ணெய் கேரியர் மற்றும் கடல்வழி லாஜிஸ்டிக் நிறுவனம் ஆகும், இது பொதுப் பட்டியல் மூலம் 600 கோடியை திரட்ட உள்ளது. இந்நிறுவனம் 2003 ஆம் ஆண்டில் ஒரு கப்பலுடன் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது, தற்போது 20 திரவப் பொருட்களுக்கான சரக்குக் கப்பல்கள் கொண்ட நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த கப்பல்கள் மொத்தம் 1.1 மில்லியன் டன் கொள்ளளவு எடை கொண்டது. ஐபிஓ வருமானம் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு மற்றும் புதிய கப்பல்களை வாங்க பயன்படும்.
ஆதார் ஹௌசிங் பைனான்ஸ் (Aadhar Housing Finance)
ஆதார் ஹௌசிங் பைனான்ஸ் (Aadhar Housing Finance) நிறுவனம் ஐபிஓ மூலம் 7,300 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. இது பொருளாதார ரீதியாக பலவீனமானவர்கள் மற்றும் குறைந்த அல்லது நடுத்தர வருமான வாடிக்கையாளர்களுக்கு மலிவு வீட்டு நிதி வழங்கும் நிறுவனம் ஆகும். ஆதார் ஹௌசிங் பைனான்ஸ் (Aadhar Housing Finance) நிறுவனம் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது, இந்தியா முழுவதும் சுமார் 12,000 இடங்களில் 11,431 கோடி சொத்துகளுடன் செயல்படுகிறது. இந்த நிறுவனம் அதன் மூலதன தளத்தை வலுப்படுத்த புதிய ஐபிஓ வருமானத்தைப் பயன்படுத்த உள்ளது.
ஆரோஹன் பைனான்சியல் சர்வீசஸ் (Arohan Financial Services)
ஆரோஹன் பைனான்சியல் சர்வீசஸ் (Arohan Financial Services) கொல்கத்தாவை சார்ந்த மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனமாகும். இது ஐபிஓ மூலம் 850 கோடியை திரட்ட உள்ளது. இருப்பினும், பல ஊடக அறிக்கைகள், இந்த நிறுவனம், 950 கோடி புதிய பங்குகள் மற்றும் 850 கோடிக்கு ஆஃபர் விற்பனை மூலம் 1,800 கோடியை திரட்டும் வாய்ப்பை உள்ளடக்கியதாகக் கூறுகிறது. ஆரோஹன் பைனான்சியல் சர்வீசஸ் (Arohan Financial Services) நிதி ரீதியாக ஊடுருவ முடியாத மற்றும் குறைந்த வருமானம் உள்ள மாநிலங்களில் கடன் பெரும் பெண்களுக்கு மைக்ரோ கிரெடிட் கடன்களை வழங்குகிறது. ஆரோஹன் (Arohan) அதன் மூலதனத்தை அதிகரிக்க IPO வருவாயைப் பயன்படுத்தும்.