விரைவான வளர்ச்சியைக் காணும் டிஜிட்டல் கட்டண முறைகள்: ரிசர்வ் வங்கி கருத்துக்கணிப்பு
பணமதிப்பிழப்பீட்டு நடவடிக்கையில் இருந்து (demonetisation) தொடங்கி கோவிட் தொற்றுநோய் வந்த பிறகு நாம் அனைவரும் டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறையை அதிகமாக செய்ய ஆரம்பித்து விட்டோம். ரிசர்வ் வங்கி ஜனவரில டிஜிட்டல் பேய்மென்ட்ஸ் இன்டெக்ஸ்-ஐ (Digital Payments Index-DPI) தொடங்கியது. இந்த இன்டெக்ஸ் நம்ம நாட்டுல டிஜிட்டலாக எவ்வளவு பணம் செலுத்துறாங்கன்னு கண்காணிப்பதற்காக தொடங்கப்பட்டது. டிஜிட்டல் பேமெண்ட்ஸ்கிறது நீங்க பண்ற கூகுள் பே (Google Pay), இன்டர்நெட் பேங்கிங் (internet banking) போன்றவற்றை குறிக்கும்.
DPI-யில் மார்ச் 2021 க்கான குறியீடு 270.59, இது 2020 மார்ச் குறியீடான 207.94 ஐ விட அதிகமாக ஆக இருந்தது, இது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து நாட்டில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறை விரைவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் குறிக்கிறது. மார்ச் 2019 இல் குறியீடு 153.47 ஆகவும், 2019 செப்டம்பர் மாதத்திற்குள் இது 173.49 ஆகவும், 2020 மார்ச் மாதத்தில் 207.94 ஆகவும், 2020 செப்டம்பரில் 217.74 ஆகவும் உயர்ந்தது. இந்த குறியீடு 4 மாத கால தாமதத்துடன் அரை ஆண்டு (half-yearly) அடிப்படையில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
எதையெல்லாம் இந்த குறியீடு கண்காணித்து மதிப்பு அளிக்கிறது?
- பணம் செலுத்த உதவுபவர்கள் (payment enablers)
- பணம் செலுத்துவதற்கான உள்கட்டமைப்பு (payment infrastructure factors)
- பணம் செலுத்துவோரை மையப்படுத்தி இருக்கிறதா என்பது (consumer centricity)
- பணம் செலுத்தும் செயல்திறன் (payment performance)
2020-21 முழுவதும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் (digital transactions) ஒரு நிலையான வளர்ச்சியை சந்தித்தன. UPI (Unified Payments Interface), IMPS (Immediate Payment Service), NACH (National Automated Clearing House), BBPS (Bharat Bill Payments System) மற்றும் NETC (National Electronic Toll Collection) வளர்ந்து கொண்டே சென்றது. பரிவர்த்தனைகளின் அளவு 12.5 பில்லியனிலிருந்து 22.3 பில்லியனாகவும், மதிப்பு $21.3 டிரில்லியன் லிருந்து $41 டிரில்லியன் ஆகவும் இருந்தது.
கோவிட்-19 நாட்டில் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை 5-10 ஆண்டுகள் விகிதத்தில் வேகப்படுத்தியுள்ளது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். தொற்றுநோயின் இரண்டாவது அலை இருந்த போதிலும், டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை வலுவாக இருந்தது. வணிக நடவடிக்கைகள் மீண்டும் தொடங்குவதற்கு இணங்க, NEFT, IMPS போன்ற முக்கிய பணப் பரிமாற்ற முறைகள் மீண்டு எழுந்துள்ளன. $5.47 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள 2.8 பில்லியன் பரிவர்த்தனைகளை எப்போதும் இல்லாத அளவுக்கு UPI நிகழ்த்தி காட்டியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.