சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள்: எவ்வளவு லாபம் கொடுத்திருக்கிறது தங்கம்?
தங்கத்தில் முதலீடு செய்பவர்களை நல்ல புத்திசாலிகள் என்றே சொல்லலாம். கடந்த 75 ஆண்டுகளில் தங்கம் முதலீட்டாளர்களுக்கு 54,000 சதவிகிதத்திற்கும் அதிகமான வருமானத்தை வழங்கியுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹88.62லிருந்து 10 கிராமுக்கு ₹48,000 ஆக உயர்ந்துள்ளது. தங்க நிபுணர்கள் தங்கத்தை ஒரு சிறந்த முதலீடாகக் கருதுகின்றனர். 2008-க்குப் பிறகு உலகப் பொருளாதார மந்தநிலைக்குப் (Great Depression) பிறகு தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கடந்த 75 ஆண்டுகளில் தங்கத்தின் வருமானம்
தங்க முதலீட்டு முறை மற்றும் அதன் விலை உயர்வைப் பற்றி பேசுகையில்; IIFL Securities நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் நாணய வர்த்தகத்தின் (Commodity & Currency Trade) துணைத் தலைவர் அனுஜ் குப்தா, “இந்தியர்கள் மத்தியில் தங்கம் ஒரு விருப்பமான முதலீடாக இருக்கிறது. 15 ஆகஸ்ட் 1947 அன்று இந்தியா ஒரு சுதந்திர நாடாக ஆனபோது தங்கம்லாபகரமான முதலீட்டுக் கருவியாக இருந்தது. சராசரி தங்க விலை 1947 ஆம் ஆண்டில் 10 கிராமுக்கு சுமார் ₹88.62 ஆக இருந்தது, இன்று அது 10 கிராமுக்குக் கிட்டத்தட்ட ₹48,000 ஆக உயர்ந்தது – சுதந்திரத்திற்குப் பிறகு 54,000 சதவிகிதம் லாபம் கிடைத்திருக்கிறது. 2008 உலகப் பொருளாதார மந்தநிலைக்குப் பிறகு தங்க முதலீட்டின் முக்கியத்துவம் உணரப்பட்டது. உலகெங்கிலும் ஈக்விட்டி, பாண்ட் போன்ற முதலீடுகள் திணறிய போதும் தங்கம் லாபம் ஈட்டது. தங்கத்தின் விலை 2008 இல் 10 கிராமுக்கு ₹12,500 முதல் 10 கிராமுக்கு ₹48,000 வரை உயர்ந்துள்ளது,கடந்த 13 ஆண்டுகளில் சுமார் 284 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
9-10 வருடங்கள் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால் தங்கமானது குறைந்தபட்சம் 9-10 சதவிகிதம் வருடாந்திர வருமானத்தை அளிக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று குப்தா கூறுகிறார். நீண்ட காலத்திற்குத் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பினால் தங்கத்தை எந்த விலையிலும் வாங்கலாம், ஏனெனில் ஒட்டுமொத்தமாக அது நீண்ட காலத்திற்கு ஆண்டுக்கு 9-10 சதவிகிதம் லாபம் தரும். தங்கம் தவிர தங்க ETF, தங்கப் பத்திரங்கள் போன்றவற்றையும் வாங்கலாம் என்று அவர் கூறுகிறார்.
இது தங்கம் வாங்கச் சிறந்த நேரமா?
தங்கத்தின் விலை 4 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைவாக இருக்கும் நிலையில் தங்கத்தில் முதலீடு செய்வது சரியா? ரெலிகேர் புரோக்கிங் லிமிடெட்டின் கமாடிடி மற்றும் கரன்சி ரிசர்ச் துணைத் தலைவர் சுகந்த சச்ச்தேவா கூறுகையில், “நீண்ட காலத்திற்குத் தங்கத்திற்கான மவுசு நன்றாக இருக்கிறது. சர்வதேச சந்தையில் அவுன்ஸ் ஒன்றுக்கான அதன் விலை $1,680 நிலை நன்றாக உள்ளது. MCX (Multi Commodity Exchange of India) இல், 10 கிராமுக்கு ₹ 44,700 முதல் ₹ 45,300 வரை போகிறது – நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். இந்த வரம்பில் தங்கம் இருக்கும் போது ஒருவர் வாங்கத் தொடங்க வேண்டும்.”
Credits – Mint