மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் பங்குகள் சரமாரியாக விற்கப்படுகின்றனவா?
பங்குகளின் மதிப்பு மேலும் தேய்வுறும் அச்சத்தை அடுத்து தனிநபர் முதலீட்டாளர்கள் திரளாக தங்கள் பங்குகளை விற்பதனால் மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் பங்குகளின் வீழ்ச்சி ஆழமாகிறது. NSE 500 பங்குகளில் 200 க்கும் மேற்பட்ட பங்குகள், 52 வார உச்சத்திலிருந்து 20% முதல் 75% வரை வீழ்ச்சியடைந்துள்ளன. ஒரு மாதத்திற்கு முன்பு முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் அடுத்த வெற்றிப் பங்கை கண்டுபிடிக்க துடித்துக் கொண்டிருந்த களிப்புநிலை உணர்வுக்கு இது முற்றிலும் மாறுபட்டது.
இந்த பங்குகளின் சரிவு, மார்ச் 2020-ல் அடிப்படையில் பரவலான சந்தை அணிதிரள்வினூடே பங்குகள் அதன் கீழ்மட்ட விலையிலிருந்து பன்மடங்கு உயர்ந்துக் கொண்டிருந்ததற்கு முடிவுக்கட்டலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நிஃப்டி மிட்கேப் 100 மற்றும் நிஃப்டி ஸ்மால் கேப் 100 குறியீடுகள் ஆகஸ்ட் 1 முதல் முறையே 4% மற்றும் 8% குறைந்துள்ளன. மென்பொருள் சேவை ஏற்றுமதியாளர்களின் வர்த்தக செயல்பாடுகளினால் நிஃப்டி ஐடி குறியீடு இந்த காலகட்டத்தில் 11.3% ஆதாயம் பெற்றதுடன், இதனால் நிஃப்டி திறன் மதிப்பீட்டு குறியீடு 5% உயர்ந்தது.
கடந்த பதினைந்து நாட்களில் உலோகங்கள், ரியால்டி மற்றும் ஊடக பங்குகள் மிகவும் தழுவுற்று போயுள்ளன, அதே நேரத்தில் நுகர்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பங்குகள் தங்கள் கோட்டையை தக்கவைத்துள்ளன.
“பரவலான அடிப்படையில், இடைநிலை (மிட்-கேப்) மற்றும் சிறு சந்தை மூலதன (ஸ்மால்-கேப்) அடிப்படையிலான நிறுவனங்கள், பொதுவாக 12 முதல் 18 மாத இடைவெளியில் சிறப்பாக செயல்பட்டு, அதனை தொடர்ந்து சீரிய திருத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறது, அதேவேளையில் உந்த பங்குகள் எனப்படும் மொமெண்ட்டம் ஸ்டாக்குகள் மற்றும் ஊகப் (ஸ்பெகுலேடிவ்) பங்குகள் ஆழமான திருத்தங்களை காணலாம்”, என்று ஷேர்கானின் கவுரவ் துவா கூறுகிறார். மறுபுறம், நல்ல தரமான நிறுவனங்கள் திருத்த கட்டங்களிலும் சிறப்பாக செயல்பட முனைகின்றன என்று அவர் மேலும் கூறுகிறார்.
மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் விலைகள் கூர்மையாக உயர்வதால் அந்த பங்குகளின் செங்குத்தான மதிப்பீடு குறித்த கவலைகள் சிறிது காலமாக கொந்தளித்து வருகின்றன, மேலும் இது அமெரிக்க மத்திய வங்கியின் பணப்புழக்கத்தை குறுக்குகிற குறிப்பு சந்தையில் பயத்தை ஏற்படுத்தி கவலையில் ஆழ்த்தியுள்ளது. விற்பனையானது முதல் 500 பங்குகளில் 141 பங்குகளை 200-நாள் நகரும் சராசரி விலைக்குக்கு (DMA-Day Moving Average) கீழே வர்த்தகம் செய்துள்ளது. ஒரு பங்கு அதன் 200-DMA க்குக் கீழே நழுவும்போது, அதன் கண்ணோட்டம் பங்கு விலை இறக்கப் போக்கு கரடி பிடியில் தள்ளப்பட்டதாக கருதப்படுகிறது.
கரடியின் பிடியில் அகப்படுவது மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் பங்குகள் மட்டும் அல்ல, டாடா மோட்டார்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லபோராட்டரீஸ், ஹீரோ மோட்டோகார்ப், SAIL, பயோகான், லுபின், ஆரோபிந்தோ ஃபார்மா, HPCL மற்றும் பேங்க் ஆஃப் பரோடா போன்ற லார்ஜ்-கேப் பங்குகளும் காளை சந்தையின் பிடியில் திரண்டெழுந்து அதன் ஆண்டு உச்சத்திலிருந்து 20% முதல் 30% வரை சரிந்துள்ளது. ஏழு பங்குகள் 50% க்கும் அதிகமாக சரி திருத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டது அதே வேளையில் 72 பங்குகள் 30% முதல் 50% வரை சரிந்தன.
சரிவு பீதியில் விற்பனை தொடர்ந்தால், மேலும் பல பங்குகளின் விலைகள் வீழும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கோடக் மஹிந்திரா வங்கி, ஐடிசி, மாருதி சுசுகி, அதானி கிரீன், எச்டிஎஃப்சி லைஃப், பஜாஜ் ஆட்டோ, எம்&எம், ஸ்ரீ சிமென்ட், ஐஷர் மோட்டார்ஸ், டாக்டர் ரெட்டீஸ் உள்ளிட்ட பல லார்ஜ்-கேப் பங்குகள் தற்போது 200 நாள் நகரும் சராசரியை விட குறைவான விலையில் வர்த்தகம் செய்கின்றன. 200-DMA ஒரு நீண்ட கால சராசரி என்பதால், இது ஒரு குறியீடு அல்லது ஒரு பங்கிற்கு குறிப்பிடத்தக்க ஆதரவு நிலை என்று கருதப்படுகிறது.
மேலும் வீழ்ச்சியுறும் பட்சத்தில் நன்கு அறியப்பட்ட மிட் மற்றும் ஸ்மால்-கேப் பங்குகளை வாங்குவதற்கு ஒரு நல்ல நேரம் என்று சிலர் கருதுகின்றனர். “நிஃப்டி குறியீட்டின் மிட்கேப் விகிதம் மூன்று வருட உச்சத்தில் இருந்தது, அதனால் லாப முன்பதிவு எதிர்பார்க்கப்பட்டது, மேலும் பொருட்களின் விலைகள் அதிகரித்ததால், மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் பங்குகளின் வீழ்ச்சி அதிகரித்துள்ளது” என்று மூத்த ஆராய்ச்சி ஆய்வாளர் விகாஸ் ஜெயின் கூறுகிறார். “ஆட்டோ மற்றும் வங்கி போன்ற துறைகள் அடுத்த சில மாதங்களில் கவர்ச்சிகரமானவையாக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம், ஏனெனில் அவை பல மாத ஆதரவு நிலைகளில் வர்த்தகம் செய்கின்றன மற்றும் சமீபத்திய விலை திருத்தம் நல்ல இடர்-வெகுமதியை வழங்குகிறது.” என்று கூடுதலாக தெரிவித்தார்.