பங்குச் சந்தையில் பணக்காரர்கள் மட்டுமே வாங்க முடியும் பங்குகள் !
“ப்ளூ சிப்” பட்டியலிடப்பட்ட டயர் நிறுவனமான MRF-ன் ஒரு பங்கின் விலை 78 ஆயிரம் ரூபாய், இது ஒரு வேடிக்கையான பங்குச் சந்தை நிகழ்வு. MRFன் பங்குகளை பெரிய நிறுவனங்கள்தான் வாங்க முடியும். ஒரு பங்கினை 78 ஆயிரம் ரூபாய் கொடுத்து சிறு முதலீட்டாளர்கள் வாங்க முடியுமா என்ன?
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனமாகும். 18 ஆயிரம் கோடியை விற்றுமுதலாகக் கொண்ட இந்த நிறுவனம் தனது பங்குகளை பிரித்தோ அல்லது போனஸோ இதுவரை வழங்கவில்லை. ஒருவேளை அதுபோல செயல்பட்டிருந்தால் அந்த நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 4 இலக்கத்தில் தான் இருந்திருக்கும்.
இது ஒரு மாதிரிதான், இதுபோல நிறைய பங்குகள் வர்த்தகமாகிறது, இந்தக் கட்டுரை பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வடிகால் அல்ல, ஆனால் இந்த பிரச்சினை விரைவில் சரி செய்யப்பட வேண்டும்.
பங்குகளைப் பிரிப்பது தான் இதற்கான சரியான தீர்வாக இருக்க முடியும், ஏனெனில் சிறிய முதலீட்டாளர்கள் அதிக செயல்திறன் கொண்ட உயர்ந்த விலைப் பங்குகள் வைத்திருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்ய முடிவதில்லை.
இங்கே சில தரவுகள் தரப்பட்டுள்ளன. இது ஒரு சாம்பிள் தான்.
புனேவில் உள்ள ஆட்டோமேசன் நிறுவனமான ஹனிபெல், தனது நிறுவன பங்குகளை 46 ஆயிரம் ரூபாய்க்கு கொடுக்கிறது, MRF நிறுவனத்தின் பங்கு 78 ஆயிரம் ரூபாய். யார் வாங்குவது?
இதுபோலவே கீழே அதிக தோராயமாக யூனிட் மதிப்புக்களைக் கொண்ட சில நிறுவனங்கள் உள்ளன.
3M இந்தியா – ₹ 26,000/-
அப்போட் – ₹ 23,000/-
நெஸ்லே ₹ 19,000/-
பஜாஜ் ஃபின்சர்வ் – ₹ 17,000
போஷ்க் – ₹ 17,500
போன்ற விலை மதிப்பு கொண்ட பிரபல நிறுவனங்கள் உள்ளன.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களை மெகா கேப்ஸ், லார்ஜ் கேப்ஸ், மிட் கேப்ஸ், ஸ்மால் கேப்ஸ் மற்றும் மைக்ரோ கேப்ஸ் என்று வகைப்படுத்துகின்றனர். இவற்றில் 92 மெகா கேப்ஸ், 85 பெரிய நிறுவனங்களும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு பல உயர்தர பங்குகளை விற்பனை செய்கின்றனர். இவை 4 இலக்கங்களில் விற்பனை ஆகின்றன.
கம்பெனிகள் சட்டம் 1956ன் படி இந்திய நிறுவனங்கள் 10 ரூபாய் முக மதிப்பு கொண்டவையாக இருந்தன. சில அரிதான சந்தர்ப்பங்களில் 100 வரை முக மதிப்பு கொண்டவையாக இருந்தன. உதாரணமாக ACC பங்குகளின் முக மதிப்பு 100 ரூபாயாக இருந்தது. அதன்பின் முகமதிப்பை 10 ரூபாயாக குறைக்க நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் 1999ஆம் ஆண்டு டாட்.காம்களின் திடீர் வளர்ச்சியினால் தொழில்நுட்ப நிறுவனங்கள், செபி மற்றும் நிதி அமைச்சகத்தினை ஏதோ கற்காலத்தில் வாழ்பவர்கள் போல சித்திரித்து விட்டனர். அதன்பின் நிதியமைச்சும் செபியும் எடுத்த நடவடிக்கை காரணமாக நிறுவனங்கள்
தங்கள் பங்குகளை 1,2,5 ரூபாயாக பிரித்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஆனால் முக மதிப்பு என்ற கருத்தில் மட்டும் உறுதியாக இருந்தது.
இது ஒருபுறம் இருக்க டாட்.காம் சந்தைகளில் உச்சத்தில் இருந்தபோது ஜீ நிறுவனப் பங்குகள் 1,500 ரூபாய் வரை (1 ரூபாய் இணை மதிப்பு) உயர்ந்தது. அதன் P/E மதிப்பு 250 ஆகும்.
இப் பங்குகள் 10 ரூபாய் முக மதிப்புள்ள தலா 10 பங்குகளாக பிரிக்கப் படும். பின்னர் 1 ரூபாய் பங்குகள் ஒவ்வொன்றும் 10 ஆயிரம் வரை உயரும். இதைத்தான்,”தஸ்கா ஏக் அவுர் ஏக் கா தஸ் ” என்று பிரபலமான ஹிந்தி சொல்லாடலில் குறிப்பிடுவார்கள். அதாவது “பத்துக்கு ஒன்று மற்றும் ஒன்றுக்குப் பத்து”
ஒரு முகமதிப்பு பிரிக்கப்படும் போது பங்குகளின் எண்ணிக்கை அதே விகிதத்தில் அதிகரித்து மூலதனத்தை அப்படியே வைத்திருக்கும். சுமார் 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. பல நிறுவனங்கள் பங்குகளை பிரித்து விட்டன. சில்லரை முதலீட்டாளர்களும் தரமான பங்குகளை வாங்கும் முறையில் இருந்தன. ஆனாலும் முகமதிப்பு பிரச்சனை அப்படியே இருக்கிறது. தலைசிறந்த கம்பெனிகள் தங்களது லாபத்தை சீராக மேம்படுத்துகின்றன. பங்கு வணிகத்தில் வருவாய் வருவதால் பங்குகளின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
குறிப்பாக அதுல் லிமிடெட்டின் பங்குகளின் விலை 2014 ஆம் ஆண்டில் மூன்று இலக்கத்தில் இருந்தது. அது தற்போது 5 இலக்கத்தை எட்டியிருக்கிறது, அத்துடன் அதன் பங்குகளை ஒரு ரூபாய்க்கு பிரித்தால் யூனிட் மதிப்பு உயரும், ஆனால் உள்ளார்ந்த பிரச்சனை இருக்கும் ஒரு நிறுவனம் தனது பங்குக்கு ஒரு ரூபாய்க்கு பிரித்துவிட்டால் எதிர்காலத்தில் அதை மேலும் பிரிக்க முடியாது, யூனிட் மதிப்பை குறைப்பதற்கான ஒரேவழி போனஸ் வழங்குவதுதான். இது மூலதனத்தை உயர்த்துகிறது, கட்டமைப்பை மாற்றுகிறது. ஆகவே இது விரும்பத்தக்கதாக இருந்தது
மூலதன கட்டமைப்பை மாற்றாமல், பங்குகளின் யூனிட் மதிப்பை மாற்ற வேண்டும். தீர்வு வெளிப்படையானது. அதன் முக மதிப்பை ஒழிப்பதுதான் தீர்வை தரும், முகமதிப்பு நீக்கப்பட்ட உடன் நிறுவனங்கள் தங்கள் மூலதனத்தை எத்தனை பங்குகளாக வேண்டுமானாலும் பிரிக்க முடியும். உதாரணத்திற்கு பஜாஜ் பைனான்ஸ் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பங்கு 7200 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. பங்கு மூலதனம் 120 கோடி ரூபாய் ஆகும். அதாவது 600 மில்லியன் பங்குகள் ஒவ்வொன்றும் இரண்டு ரூபாய் மதிப்பு கொண்டவை முகமதிப்பு நீக்கப்பட்ட 120 கோடி ரூபாய் மூலதனத்தில் எத்தனை பங்குகளாக வேண்டுமானாலும் பிரித்துக் கொள்ள முடியும். 6 ஆயிரம் பங்குகளை வைத்திருக்க முடிவு செய்தால் ஒரு பங்கின் விலை 770 ரூபாயாக குறைக்கப்படும். நல்ல முதலீட்டாளர்கள் வாங்கக் கூடியதாக இருக்கும்.
கேள்வி அணுகுமுறை பற்றி மட்டுமல்ல. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 15 மில்லியனுக்கும் அதிகமான புதிய முதலீட்டாளர்கள் சந்தையில் நுழைந்துள்ளனர். அதே நேரத்தில் தரமான பங்குகளின் விலைகள் அடுத்த கட்டத்துக்கு போய்விட்டன. அவர்களது முதலீட்டுக்கான நல்ல உபாயங்களை வழங்க வேண்டும். உங்கள் உபரி மூலதனத்தின் ஒரு பகுதியை நீண்ட காலத்திற்கு ஈக்குவிட்டி பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.
பங்குகளுக்கு ஒதுக்க ஒரு லட்ச ரூபாய் இருந்தாலும், உங்களால் பஜாஜ் பைனான்ஸ் அல்லது எஸ்ஆர்எப் 25 பங்குகளை விரும்பினாலும் வாங்க முடியாது, அதிகபட்சம் ஒவ்வொரு பங்கிற்கும் ரூபாய் 4000 ஒதுக்கலாம். ஆனாலும் பல தரமான பங்குகளில் உங்களால் முதலீடு செய்ய முடியாது.
முக மதிப்பை ஒழிப்பதுதான் இந்த சிக்கலை சரிசெய்யும். இது பங்கு விற்பனையை உயர்த்தும். பணப்புழக்கத்தை அதிகரிக்கும். மற்றும் இந்தியாவை நவீன யுகத்துக்கு மாற்றும்.
இவ்வளவு தெளிவான, வெற்றிகரமான, யோசனையை ஏன் இதுவரை யாரும் செயல்படுத்தவில்லை?
அது சரி. சிறு முதலீட்டாளர்கள் பற்றிக் கவலைப்பட இங்கே யார் இருக்கிறார்கள்?