செலவழி, பண பற்றாக்குறையா? கடன் பெற்று செலவழி! – இது அரசாங்கத்திற்காக.
செலவழிக்கவும், பணம் பற்றாக்குறையாக இருந்தால், கடன் பெற்று செலவழிக்கும் தைரியத்தையும் காட்ட தவறிய அரசாங்கம்! – திரு. பா சிதம்பரம் அவர்களது எழுத்துக்களிலிருந்து.
ஆகஸ்ட் 31, 2021 அன்று, தேசிய வருமானம் குறித்த மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் (CSO) மதிப்பீடுகள் அறிவிக்கப்பட்டன. ஜிடிபி 20.1 சதவீத மதிப்பில் உண்மையில் ஈர்க்கக்கூடியதாக இருந்தது. இந்த இலக்கத்தினால் மற்றும் அரசாங்கத்தின் இந்த சுழற்றலினால் ‘மக்களாக நாம்’ வசப்பட்டுப்போவோம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஊடகங்களுக்கும் மக்களுக்கும் பாராட்டுக்கள் (ஒரு சில பக்தாள்களை தவிர்த்து), அவர்கள் இந்த எண்களால் குழப்பமடைய மறுத்து உண்மையை விரைவாக உணர்ந்துக்கொண்டனர். உண்மை என்னவென்றால், 2021-22 முதல் காலாண்டில் ஜிடிபியின் வளர்ச்சி விகிதம் (20.1 சதவிகிதம்) ஒரு புள்ளிவிவர மாயையாக இருந்தது, ஏனெனில் 2020-21 காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கும் கீழ் ‘தரைமட்டமாக’ (-)24.4 சதவிகிதம் என்ற நிலையில் இருந்தது. இதை தான், ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணர் டாக்டர் கீதா கோபிநாத் சில மாதங்களுக்கு முன்பு “கணித வளர்ச்சி” என்று விவரித்தார்.
மக்கள் எதை அடைய முடியும்
ஆயினும்கூட, 20.1 சதவிகித வளர்ச்சியை நாம் வரவேற்க வேண்டும், ஏனென்றால் உணர்ச்சியற்ற மற்றும் அக்கறையற்ற அரசாங்கத்தைப் பொருட்படுத்தாமல் ஒரு நாடும் அதன் மக்களும் என்ன சாதிக்க முடியும் என்பதை இது காட்டுகிறது. முதல் காலாண்டின் ஆரம்ப வாரங்களில் (ஏப்ரல் -ஜூன் 2021) இரண்டாவது கோவிட்-19 அலை ஏற்பட்டிருந்தபோது, மாநில அரசுகள் பொருளாதாரம் மூடப்பட்டுவிடாமல் நெருக்கடியை நிர்வகித்தன. திரு. மோடியின் அரசாங்கத்தின் பங்களிப்பு ஆக்சிஜன் வழங்கல் மற்றும் ஒதுக்கீட்டை நிர்வகிப்பதில் அதன் மிகப்பெரிய தோல்வி: பல வாரங்களாக கடுமையான பற்றாக்குறையினால் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை ஏற்படுத்தியது. (இதில் ஒவ்வொரு பதிவுசெய்யப்பட்ட மரணத்திற்கும் குறைந்தது 10 மரணங்கள் பதிவுசெய்யப்படாதவையாக நம்பப்படுகிறது).
இந்த 20.1 சதவிகித வளர்ச்சி விகிதம் மக்களின் ‘தனிப்பட்ட இறுதி நுகர்வுச் செலவு’ வாயிலாக முன்நடத்தப்பட்டுள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகளை உட்கொள்வதற்காக மக்கள் தங்கள் பணத்தை செலவிட்டுள்ளனர். அது முதல் காலாண்டில் ரூ.17,83,711 கோடியாகவும் கடந்த ஆண்டின் முதல் காலாண்டில், அதாவது பெருந்தொற்றின் முதல் அலையின்போது ரூ.14,94,524 கோடியாக இருந்த இந்த தொகையை ஒப்பிடும்போது ஒரு செங்குத்தான ‘வளர்ச்சிதான்’!
உண்மையான அளவுகோல்
மற்றொரு இறுதி நுகர்வு செலவு உள்ளது, இது அரசாங்கத்தினுடையது. அரசாங்க செலவினங்கள் ‘தனிப்பட்ட இறுதி நுகர்வுச் செலவுகளுக்கு’ இணையாக இருந்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். முந்தையது கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 4,42,618 கோடியில் இருந்து இந்த ஆண்டு ரூ. 4,21,471 கோடியாக குறைந்துள்ளது. ஆகவே, முதல் காலாண்டின் முடிவுகள் அரசாங்கத்தின் பங்களிப்பிற்கு எதிர்மறையாக உள்ளது. வளர்ச்சியின் நான்கு இயந்திரங்களில் ஒன்றான ஏற்றுமதியை அதிகரிக்க அரசாங்கம் பயனுள்ள எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ‘நிகர ஏற்றுமதி’ கூட கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 34,071 கோடியாக இருந்து, இந்த ஆண்டு (-)ரூ. 62,084 கோடியாகிவிட்டது. 20.1 சதவிகித வளர்ச்சி விகிதம், கணிதமாக இருந்தாலும், மக்களுக்கு நன்றி, அரசாங்கத்திற்கு?
செலவழிக்கவும், பணம் பற்றாக்குறையாக இருந்தால், கடன் பெற்று செலவழிக்கும் தைரியத்தையும் காட்ட இந்த அரசாங்கம் தவறிவிட்டது. பிரமிட் அமைப்பின் கீழ் மட்டத்தில் உள்ள 20 அல்லது 25 சதவிகித குடும்பங்களுக்கு பணப் பரிமாற்றத்தை செய்திருக்க வேண்டும். அந்த பணத்துடன், ‘தனிப்பட்ட இறுதி நுகர்வு செலவு’ ஒரு பெரிய ஊக்கத்தை பெற்றிருக்ககூடும். அரசாங்க செலவினங்கள் மற்றும் அதிகரித்த தனியார் நுகர்வு ஆகியவை சேர்ந்து வளர்ச்சி விகிதத்தை 25 சதவிகிதத்திற்கு மேல் நிறுத்தியிருக்க முடியும், இதனால் கடந்த ஆண்டு (-)24.4 சதவிகிதம் சரிந்தது.
2021-22-ன் முதல் காலாண்டுக்கான எண்கள் பொருளாதாரத்தின் சில தீவிர பலவீனங்களை வெளிப்படுத்துகின்றன. உண்மையான அளவுகோல் 2020-21 (தொற்றுநோய் ஆண்டு) அல்ல, 2019-20 (தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டு). அந்த ஆண்டு வருடாந்திர தரவு வெளியீடு சந்தேகத்திற்கு இடமின்றி மிதமானதாக இருந்தாலும், மேல்நோக்யதாக இல்லை. நாம் அதை அடைந்து விட்டோமா என்று கேட்டால், அதற்கு பதில்: இல்லை. முக்கிய எண்களைப் பாருங்கள்:
பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் 2019-20-ன் வெளியீட்டு அளவை இன்னும் அடையவில்லை. மோசமான விஷயம் என்னவென்றால், இந்தத் துறைகளின் வெளியீடு முந்தைய ஆண்டின் 2018-19 வெளியீட்டைக் காட்டிலும் குறைவாக உள்ளது. இதில் ஒரே நட்சத்திர செயல்நிறைவேற்றத் துறை ‘விவசாயம்’ மட்டுமே. இந்த எண்கள் நோக்கர்களால், ஆய்வுகள் மற்றும் CMIE-ன் அறிக்கைகளால் முன்னிலைப்படுத்தப்பட்டு மற்றோரு முடிவை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன, ஆனால் அரசாங்கம் கடுமையாக சர்ச்சைக்குரியதாக்கியுள்ளது: அது வேலை இழப்புகள் பற்றியது. பொருளாதாரத்தில் தொடர்ச்சியான சரிவு (மோசமான மேலாண்மை) காரணமாக 2019-20-ல் மில்லியன் கணக்கான வேலைகள் இழக்கப்பட்டன. 2020-21- ல் (தொற்றுநோய்) மேலும் அதிக வேலைகள் இழக்கப்பட்டுள்ளன. இழந்த வேலைகள் 2021-22-ல் மீண்டும் கிடைத்துவிடவில்லை. நினைவில் கொள்ளுங்கள், வேலைவாய்ப்பின் பெரும்பகுதி முறைசாரா துறையிலும் MSME களிலும் உள்ளது, மேலும் CSO மதிப்பீடுகள் முறைசாரா துறை அல்லது MSME களின் செயல்திறனைப் இதில் பொருத்திப்பார்க்கவில்லை.
ஆதாரமற்ற கோழை
V-வடிவ மீட்பு என்பது தலைமை பொருளாதார ஆலோசகரின் சோர்வடைய செய்யும் வெற்று சுழற்றல். காலாண்டு வளர்ச்சி விகிதம் 5.1 சதவிகிதத்திலிருந்து (-)24.4 சதவிகிதமாகக் குறையும் போது, அது ‘V’ என்ற எழுத்தின் இடது சாய்வால் சித்தரிக்கப்படும் ஏற்றம் மற்றும் எந்த சிறிய நேர்மறையான வளர்ச்சியும் ‘V’ யின் வலது சாய்வால் சித்தரிக்கப்படும் ஏற்றம். காலாண்டுக்குப் பிறகு சிறிய நேர்மறை வளர்ச்சி தொடர்ந்தால், வலதுபுற சாய்வு மிக மெதுவாக உயரும். அப்படி சிந்திப்பது மூளையற்றது. உண்மையான கேள்வி என்னவென்றால், 2019-20-ல் பதிவு செய்யப்பட்ட தொற்றுநோய்க்கு முந்தைய GDP இன் நிலையை நாம் எப்போது அடைவோம் என்பதே.
மீட்பை துரிதப்படுத்த அரசாங்கம் நிறைய செய்ய முடியும் ஆனால், நான் பலமுறை கூறியது போல், இந்த அரசாங்கத்திற்கு அதற்கான ஆதாரமும் இல்லை மேலும் கோழையாகவும் உள்ளது. ஒரு செய்தித்தாள் செப்டம்பர் 1 அன்று “செலவிடு, அரசாங்கமே, கடன் பெற்று செலவிடு” என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தைக் வெளியிட்டிருந்ததைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். அந்த ஆலோசனையை நான் ஆமோதிக்கிறேன். இதுவே விரைவான பொருளாதார மீட்புக்கான பாதை.