நகர்ப்புற ஆண்களின் வேலையின்மையை கிராமப்புற பெண்கள் ஈடுகட்டுகிறார்கள்: சமீபத்திய கணக்கெடுப்பு
எவ்வளவு பேர் இந்தியாவில் வேலையில்லாமல் இருக்கின்றனர் என்ற புள்ளிவிவரம் unemployment rate-ஐ காட்ட உதவும். தேசிய புள்ளிவிவர அலுவலகத்தால் (National Statistical Office) தொழிலாளர் கணக்கெடுப்பில் (Periodic Labour Force Survey) வெளியிடப்பட்ட சமீபத்திய தகவலில், இந்தியாவில் வேலையின்மை விகிதம் (unemployment rate) ஜூலை 2019 முதல் ஜூன் 2020 வரையிலான காலத்தில் 4.8 சதவீதமாகக் குறைந்துள்ளது; இது ஜூலை-ஜூன் 2018-19 இல் 5.8 சதவீதமாக இருந்தது.
அக்காலகட்டத்தில் தொழிலாளர் பங்கேற்பும் (labour participation) உயர்ந்துள்ளது. 15 வயதிற்கு மேற்பட்டவர்களில் 53.5 சதவீதம் பேர் வேலை செய்தனர் அல்லது வேலை தேடினர், 2019 ஜூலை முதல் 2020 ஜூன் வரை, 2018-19 இதே காலகட்டத்தில் இப்புள்ளிவிவரம் 50.2 சதவீதமாக இருந்தது.
மக்கள் தீவிரமாக வேலை தேடுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, பணமதிப்பீட்டிழப்பு (demonetisation), மற்றொன்று கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி.
நகர்ப்புற ஆண்களின் வேலையின்மை அதிகரிப்பு
சராசரி வேலையின்மை விகிதம் ஓரளவுக்கு குறைந்து விட்டாலும், நகர்ப்புற ஆண்களுக்கு (urban men) இது 2018-19ல் 8.8 சதவீதத்திலிருந்து 2019-20ல் 10.5 சதவீதமாகமாறியது. அதாவது, மேலும் நகர்ப்புற ஆண்கள் வேலையில்லாமல் தவித்தனர்.
இதை ஈடுகட்டும் வகையில், கிராமப்புற பெண்களின் (rural women) வேலையின்மை விகிதம் 7.3 சதவீதத்திலிருந்து 5.5 சதவீதமாகக் வீழ்ந்தது. அதாவது, நகர்ப்புற ஆண்களின் வேலையின்மையை ஓரளவுக்கு கிராமப்புற பெண்கள் ஈடுகட்டுகிறார்கள்.
2018-19 ஆம் ஆண்டில் 22.5 சதவீதத்திலிருந்து, 2019-20 ஆம் ஆண்டில் 28.3 சதவீத பெண்கள் வேலை செய்கிறார்கள் அல்லது வேலை தேடுகிறார்கள் என்றாயிற்று. இதன் விளைவாக, 15 வயதிற்கு மேற்பட்ட பெண் தொழிலாளர்களின் பங்கு அந்தக் காலகட்டத்தில் 20.9 சதவீதத்திலிருந்து 26.7 சதவீதமாக உயர்ந்தது; இது வேலை தேடும் பெண்களுக்கு அதிகமாக வேலை கிடைத்தது என்பதை குறிப்பிடுகிறது.
இது நடக்க என்ன காரணங்கள்?
பிரபல புள்ளியியல் நிபுணர் (statistician) பி சி மோகனன் கூறுகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தின் (MGNREGA) கீழ் அதிக வேலைகள், மற்றும் தொடர்ந்து ஆறுமாதத்திற்கு வேலை செய்யாமல் குறுகிய காலம், அதாவது 30 நாட்களில் இருந்து ஆறு மதம் வரை வேலை செய்ததை கணக்கில் எடுத்துக்கொண்டதால் இருக்கலாம் என்று ஊகிக்கிறார். இதனை casual labour (சாதாரண உழைப்பு) என்று கூறுவார்கள். இந்த சாதாரண உழைப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதால், பெண்களின் எண்ணிக்கை சிறப்பாக இருப்பதுபோல் இருக்கலாம் என்று மோகனன் ஊகிக்கிறார்.
மேலும், தொற்றுநோயின் தாக்கத்தை நிவர்த்தி செய்ய மத்திய அரசு கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்தது. இது சாதாரண தொழிலாளர் தீவிரமாக வேலைகளில் சேர உதவியிருக்கலாம்.