வோடபோன்-ஐடியா நிறுவனத்தை அரசு காப்பாற்றுமா
கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் வோடாபோன் – ஐடியா நிறுவனத்தை அரசு காப்பாற்றுமா? என்கிற கேள்வி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வோடாபோன் ஐடியாவின் வீழ்ச்சியை சரி செய்ய விரும்பினால், மத்திய அரசு அதற்கு ஆதரவான சில பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் 23ஆம் நிதியாண்டு வரிவசூலிப்பையும் கைவிட வேண்டும். மேலும், தொலைத்தொடர்பு துறை முழுவதற்கும் இப்போது இருக்கும் ஊக்கத்தொகைகளை தொடர வேண்டும். மதிப்பீட்டின்படி, இந்த தொழில் துறை நிலுவையில் இருக்கும் கட்டணங்களின் அடிப்படையில் இதுவரை வாங்கிய ஸ்பெக்ட்ரத்திற்காக சுமார் ₹21,000-25,000 கோடியை இழக்க நேரிடலாம்.
வோடபோன்-ஐடியா மேலும் ஒரு வருடத்திற்கு (நிதியாண்டு 23 வரை) கடன்களை / கட்டணங்களை திரும்பச் செலுத்துவதற்கு கால நீட்டிப்புக் (moratorium) கோரியுள்ளது. ஒருவேளை இது அனுமதிக்கப்பட்டால், அரசாங்கம் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கான காலநீட்டிப்பை வழங்கியுள்ளதால், மூன்றாவது ஆண்டாக இந்தக் கால நீட்டிப்பு இருக்கும். ஏற்கனவே தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ₹42,000 கோடி மதிப்புள்ள நிவாரணத்தை அரசு வழங்கியது.
ஆனால், இந்த நிவாரணமானது நிறுவனங்கள் செலுத்தவேண்டிய வட்டித்தொகையைக் கழித்தே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பே-அவுட் 16 ஆண்டு காலத்திற்கானது. செல்லுலார் ஆபரேட்டர்கள் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (Cellular Operators Association of India) மதிப்பீட்டின்படி, மொத்த உரிமங்களுக்கான கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டாளர் கட்டணங்கள் தற்போது தொழில்துறையின் கணக்கீட்டின்படி ஆண்டுதோறும் ₹17,000 கோடிக்கு மேல் உள்ளது.
வோடபோன்-ஐடியாவுடன் இணைந்து ஒட்டுமொத்த தொலைத் தொடர்புத் துறையும் கட்டணக் குறைப்புக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. AGR எனப்படும் திருத்தப்பட்ட மொத்த வருமானத்தின் (Adjusted Gross Revenue) 4 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக உரிமக் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்றும், 8 சதவீதமாக இருக்கும் ஸ்பெக்ட்ரம் பயனர் கட்டணங்கள் பாதியாகக் குறைக்கப்பட வேண்டும் என்றும் தொலைத் தொடர்புத் துறையும், வோடபோன்-ஐடியாவும் எதிர்பார்க்கின்றன.
இது அரசுக்குப் பணம் செலுத்துவதில் இருந்து கணிசமான மானியத்தைக் குறிக்கும். வோடபோன்-ஐடியா இப்போது மூன்றாவது சலுகைக்காகக் கோரிக்கை வைத்து, அழுத்தம் கொடுத்து வருகிறது. ஜி.எஸ்.டி வரியை எப்படியும் அரசு செலுத்தும் என்று நம்புகிறது. அப்படி நடக்க வேண்டுமென்றால், அரசு அனைத்து தொலைத் தொடர்புத் துறைக்கு ₹35,000 கோடி வழங்க வேண்டியிருக்கும். சிக்கல் என்னவென்றால், ஒருவேளை வோடபோன்-ஐடியா மூடப்பட்டால், அரசுக்கும் வருவாய் இழப்பு உருவாகும்.
எடுத்துக்காட்டாக, ஜி.எஸ்.டி, உரிமக் கட்டணங்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டாளர் கட்டணங்களால் அரசுக்கு வரக்கூடிய வருவாய் இழப்பு ₹17,000 கோடி வரை இருக்கும் என்கிறது செல்லுலார் ஆபரேட்டர்கள் அசோசியேஷன் ஆஃப் இந்தியா மதிப்பீடு. வோடபோன்-ஐடியா அடுத்த 14 ஆண்டுகளுக்கு செயல்படும் பட்சத்தில் என்ற அனுமானத்தை வைத்து இது கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த மதிப்பீட்டின்படி இரு வழிகளிலும் பெரும் இழப்பு ஏற்படும் என்பதால், அரசு ஒரு சமநிலையான தீர்வுக்கு வரக்கூடும். தொலைத் தொடர்புத்துறைக்கு என்ன சலுகைகள் வழங்கலாம் என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருவதாக தொலைத்தொடர்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வோடபோன்-ஐடியாவின் தலைவர் குமார்மங்கலம் பிர்லா, தனது பதவியிலிருந்து விலகிய நிலையில், நிறுவனத்தைக் காப்பாற்ற பொதுத்துறை, அரசு அல்லது உள்நாட்டு நிதி நிறுவனம் என எந்த நிறுவனத்திற்கும் தனது பங்குகளைக் கொடுப்பதற்குத் தயாராக இருப்பதாக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள், AGR பொறுப்புகள் மற்றும் நடைமுறை விலை நிர்ணய முறை மீதான கால அவகாசம் என்பது அரசின் செயலூக்க ஆதரவு இல்லாமல், நிறுவனம் வீழ்ச்சி அடையும் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சிக்கல் என்னவென்றால், உச்ச நீதிமன்றம், AGR நிலுவைத்தொகை கணக்கிடும் முறையை மாற்ற மறுப்பதன் மூலம், அத்தகைய ஒரு மாற்றத்தை அரசு செய்வதற்கான வழிகளையும் அடைத்து விட்டது. தொலைத்தொடர்பு ஆணையம் நடைமுறை விலையை நிறுவனங்களின் மீது திணிப்பதற்கு ஆதரவாக இல்லை என்றும் தொலைத்தொடர்புத் துறை வட்டாரங்களால் நம்பப்படுகிறது.
₹25,000 கோடி திரட்ட கொள்கை சார்ந்த முதலீட்டாளர்களைக் கண்டறிவதில் இருந்து வோடபோன்-ஐடியா நிறுவனம் தோல்வியடைந்து விட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காரணம், பிர்லா மற்றும் வோடபோன் பிஎல்சி உள்ளிட்ட தற்போதுள்ள முதலீட்டாளர்கள், இனி நிறுவனத்தில் பணம் போடுவதில்லை என்று முடிவு செய்துள்ளனர். இந்த முடிவு நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
வோடபோன்-ஐடியா வங்கியில் பெற்ற கடன்களை திரும்பிச் செலுத்துவதில் தவறவில்லை. எனவே இது ஒரு சிக்கலான சொத்து அல்ல, மேலும் திவால் குறியீட்டு வழக்காக (Insolvency and Bankruptcy Code) மாறாது என்று ஆய்வாளர்கள் விளக்குகிறார்கள். இருப்பினும், அது ஒரு சிக்கல் மிகுந்த சொத்தாக மாறி, IBCக்கு சென்றால், அது ஏ.வி.பிர்லா குழுவை பெரிய அளவில் பாதிக்கலாம். அப்படி நடந்தால், ஏ.வி.பிர்லா குழு IBC யின் கீழ் வரும் நிறுவனங்களில் எதிர்காலத்தில் ஏலமெடுப்பதில் தடைகளை எதிர்கொள்ளும் என்று அவர்கள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.