வரும் வாரம் இந்திய பங்குச் சந்தைகள் எப்படி இருக்கப்போகிறது?
அமெரிக்காவில் நிலவும் கடுமையான பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து துறை வட்டிகளையும் உயர்த்த வேண்டுமென அமெரிக்க பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பாவல் அண்மையில் கூறியிருந்தார். இது அந்நாட்டின் பங்குச்சந்தையில் தாக்கத்தை உண்டாக்கியது. இது மட்டுமல்லாமல் உலகளாவிய பங்குச்சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக இந்திய பங்குச்சந்தையில் பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த6 வாரங்களாக ஏற்றத்தில் இருந்த இந்திய பங்குச்சந்தையான நிப்டி, தற்போது திருத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும்., வரும் வாரங்களில் இந்த நடவடிக்கை தொடரும் என்றும், பாவல் அவர்கள் பேசியதன் தாக்கம் உலக சந்தை களில் முக்கியமாக பார்க்கப்படுவதாகவும், சர்வதேச சந்தைகளின் தாக்கம் இந்தியாவில் பிரதிபலிக்கும் என்றும் ஸ்வஸ்திகா இன்வெஸ்ட்மெண்ட் நிறுவன தலைவர் சந்தோஷ் மீனா கூறுகிறார்.
மேலும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான GDP ,மற்றும் ஆகஸ்ட் மாதத்தின் ஆட்டோ மொபைல் விற்பனை, ஆகியவையும் இந்திய பங்குச்சந்தையில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இவை தவிர கச்சா எண்ணெய், அமெரிக்க bond ஆகியவையும் கருத்தில் கொள்ளும் அம்சமாக பார்க்க படுகிறது.
செப்டம்பர் மாத்துக்கான புதிய F&o வரும் வாரத்தில் வரிசை கட்ட உள்ளதால் வரும் வாரம் முக்கியமாகவும், பரபரப்பாகவும் சந்தை காணப்படும்.
பாவலின் கருத்தால் அமெரிக்க சந்தை சற்று ஆட்டம் கண்டாலும் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அளித்துள்ளது என்று ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவன தலைமை முதலீட்டு அதிகாரி நவீன் குல்கர்னி கூறியுள்ளார்
இதேபோல் அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி உயர்வால் இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்த கொள்கை கூட்டத்திலும் கடன்களுக்கான வட்டி விகிதம் இன்னும் ஒரு முறை உயர்த்த வாய்ப்பு இருப்பதாக அம்பித் அசட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிதி மேலாளர் ஐஸ்வர்யா தாதீச் கூறியுள்ளார்.